search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி ஆர்.சி. பள்ளியில்  முன்னாள் மாணவர்கள் சார்பில் கணினிகள் வழங்கல்
    X

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

    தென்காசி ஆர்.சி. பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் கணினிகள் வழங்கல்

    • தென்காசி மேலப்புலியூரில் உள்ள வீரமாமுனிவர் ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
    • இதனையடுத்து 1983-ல் பள்ளி படிப்பினை முடித்தவர்கள் சார்பாக 7 கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்காசி:

    தென்காசி மேலப்புலியூரில் உள்ள வீரமாமுனிவர் ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பள்ளி நிர்வாகம் சார்பில் கணினி ஆய்வகத்திற்கு, ஓரு கணினி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதனையடுத்து 1983-ல் பள்ளி படிப்பினை முடித்தவர்கள் சார்பாக 7 கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது 1988 முதல் 1996 வரை படித்த மாணவர்கள் சார்பாக 2 கணினிகள் தருவதாக ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து முன்னாள் மாணவர் சங்கத்தின் பெண் ஆலோசகரும், குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி விரிவுரையாளருமான டாக்டர் காமினி என்ற முத்து கிருஷ்ணம்மாள் மற்றும் முன்னாள் மாணவர் லட்சுமணன் இருவரின் ஒருங்கிணைப்பில் 2 கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பள்ளியின் தாளாளர் போஸ்கோ குணசீலன் வர வேற்றார். முன்னாள் ஆசிரியர் ஆர்.செலஸ்டின் மேரிமற்றும் வீரமாமுனிவர் ஆர் சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செசிலி அபிஷேக ரத்னா ஆகியோர் தலைமை தாங்கினார். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பெண் ஆலோசகர் ரசூல் பீவி வாழ்த்துரை வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து அமெரிக்கா தனியார் நிறுவ னத்தின் முதுநிலை மேலாளர்.முன்னாள் மாணவர் எஸ்.செய்யது சுலைமான் மாணவர்களுக்கு உரையாற்றினார்.

    தஸ்லிம் சமீமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னாள் மாணவர்கள் ராஜாத்தி, சுதர்சன், சரவணன், பாதுஷா, ராம்குமார், ராஜ்குமார், சங்கர மூர்த்தி, முத்து , சீதாராமன் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×