த.வெ.க.வின் பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம்

சென்னை, பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் பயிற்சி பட்டறை.நாளை காலை 10.35 மணியளவில், பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
த.வெ.க.வின் பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம்
Published on

தவெகவின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம், ஜூலை 8ம் தேதி பனையூரில் நடக்க உள்ளதாக அக்கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், தமிழகத்தின் இரண்டு கோடி இல்லங்களில், இரண்டு கோடி கழக உறுப்பினர்கள் என்ற இலக்குடன் உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

இது குறித்துச் சென்னை, பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில், வருகிற 08.07.2025 அன்று காலை 10.35 மணியளவில், பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் இரண்டு நிர்வாகிகளை மட்டும் மடிக்கணினியுடன் அழைத்து வர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்களுடன், கழகத்தின் மற்ற நிர்வாகிகளை இந்தக் கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்று கழகத் தலைவர் அவர்கள் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com