திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயிற்சி பட்டறை

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ‘மேம்படுத்தப்பட்ட கணினி மென்பொருள் மூலம் புள்ளியியல் பயன்பாடு’ என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடந்தது. செந்திகுமார நாடார் கல்லூரி பொருளியல் துறை இணை பேராசிரியர் விஜயகுமார் , பொருளியலில் ஆய்வு தரவுகளை பகுத்தாய்வு செய்வது என்பதை நடைமுறை தரவுகள் மூலம் விளக்கி கூறினார்.
பயிற்சி பட்டறை நடந்தபோது எடுத்த படம்.
பயிற்சி பட்டறை நடந்தபோது எடுத்த படம்.
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை பொருளியல் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில், முதுகலை பொருளியல் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு 'மேம்படுத்தப்பட்ட கணினி மென்பொருள் மூலம் புள்ளியியல் பயன்பாடு' என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறைத்தலைவர் மாலைசூடும் பெருமாள் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரி பொருளியல் துறை இணை பேராசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொருளியல் மாணவர்கள் புள்ளியியல் முறைகளை கணினி மென்பொருள் மூலம் எவ்வாறு கையாள்வது?, பொருளியலில் ஆய்வு தரவுகளை பகுத்தாய்வு செய்வது என்பதை நடைமுறை தரவுகள் மூலம் விளக்கி கூறினார். இதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பொருளியல் மன்ற துணைத்தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com