ஆலங்குளத்தில் காமராஜர் சிலை பராமரிப்பு ஆலோசனை கூட்டம்

எஸ்.எஸ்.என். திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிலை அமைப்பு குழுத் தலைவர் எம்.எஸ்.காமராஜ். ஜான்ரவி தலைமை தாங்கினார்.கூட்டத்தில் புதிய சிலையை வடிவமைப்பது குறித்தும், அதற்கு நிதி திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சிலை அமைக்கும் பணிக்கு முதல் தவணையாக மாவட்ட செயலாளர்  சிவபத்மநாதன்  ரூ. 1 லட்சத்து ஆயிரத்தை நிர்வாகிகளிடம் அளித்த காட்சி.
சிலை அமைக்கும் பணிக்கு முதல் தவணையாக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ரூ. 1 லட்சத்து ஆயிரத்தை நிர்வாகிகளிடம் அளித்த காட்சி.
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் காமராஜர் சிலை பராமரிப்புக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலங்குளம் எஸ்.எஸ்.என். திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிலை அமைப்பு குழுத் தலைவர் எம்.எஸ்.காமராஜ். ஜான்ரவி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அலெக்ஸ், பர்வீன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நெல்லை எம்.பி. ராமசுப்பு, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

கூட்டத்தில் புதிய சிலையை வடிவமைப்பது குறித்தும், அதற்கு நிதி திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சிலை அமைக்கும் பணிக்கு முதல் தவணையாக சிவபத்மநாதன் ரூ. 1 லட்சத்து ஆயிரத்தை நிர்வாகிகளிடம் அளித்தார். நிகழ்ச்சியில் ஆலங்குளம் அனைத்துக் கட்சி, அமைப்புகள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com