search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MPs"

    எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தலைமையில் நடைபெற்றது.
    குன்னம்:

    பெரம்பலூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஆலத்தூர் ஒன்றியம் அடைக்கம்பட்டி எம்.ஜி.ஆர் திடலில் மறைந்த அ.தி.மு.க. நிறுவனரும், தமிழக முதல்வரும்மான எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆலத்தூர் ஒன்றிய செய லாளர் என்.கே.கர்ணன் தலைமையில் நடைபெற்றது.

    அனைவரையும் வேப்பந் தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் வரவேற்றார். மாவட்ட அவை தலைவர் துரை, மாவட்ட இணைசெயலாளர் ராணி, துணை செயலாளர் லட்சுமி, முன்னாள் தொகுதி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினரும்மான ஆர்.டி.ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளரும் சிதம்பரம் எம்.பி.யும்.மான சந்திரகாசி, பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாரும் எம்.பி.யும்மான மருதராஜா, பெரம்பலூர் எம்.எல்.ஏ. தமிழ்செல்வன், தலைமை கழக பேச்சாளர்கள் சிவகாசி சின்னதம்பி,திட்டை மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    விழாவில் அடைக்கம்பட்டி குருசாமி, ரமேஷ், ராஜ், மாரிமுத்து,மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற செயலாளர் ராஜராம், ஜெ.பேரவை செயலாளர் உதயம் ரமேஷ், ராமலிங்கம், முத்தமிழ், ராஜேஸ்வரி, வீரபாண்டியன், முத்துசாமி, லேட்டஸ்ட் செல்வராஜ், மதுபாலன், செட்டிகுளம் தங்கராசு, மார்கண்டன், திருநாவுகரசு, தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பெரம்பலூர் நகர செயலாளர் ராஜ பூபதி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் செய்திருந்தார். #ADMK
    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இன்று அதிமுக தெலுங்குதேசம் கட்சிகளின் எம்பிக்களின் அமளி காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #ParliamentAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக அதிமுக எம்பிக்களும், ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சிறப்பு நிதி தொகுப்பு வழங்க வலியுறுத்தி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் காங்கிரஸ் எம்பிக்கள் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. மக்களவை கூடிய சிறிது நேரத்தில் அதிமுக எம்பிக்கள் எழுந்து கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர். மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டபடியே அவையின் மையப்பகுதிக்கு சென்றனர். கைகளில் கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

    பின்னர் அவர்களுடன் தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும் இணைந்துகொண்டனர். இதனால் அவையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவையை மதியம் வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.


    இதேபோல் மாநிலங்களவையில் அதிமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, பல்வேறு மசோதாக்களும் விவாதங்களும் நிலுவையில் இருப்பதால் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதிமுக உறுப்பினர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.

    ஆனாலும் எம்பிக்களின் அமளி நீடித்தது. இதையடுத்து முதலில் 15 நிமிடங்களுக்கும், அதன்பின்னர் மதியம் 12 வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோதும் இதே நிலை நீடித்தது. இதையடுத்து இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #ParliamentAdjourned
    எம்எபி, எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PendingCases #SupremeCourt
    புதுடெல்லி:

    குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட  அரசியல்  தலைவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க கோரி, வழக்கறிஞரும் பாஜக தலைவருமான அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை அமிகஸ் கியூரியாக நியமித்தது.

    அஸ்வினி உபாத்யாய்

    இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நாடு முழுவதிலும் பல்வேறு நீதிமன்றங்களில் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    நாடு முழுவதிலும் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்பி,எம்எல்ஏக்களுக்கு எதிராக மொத்தம் 4122 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டிலேயே எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக 321 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 71 வழக்குகள் மட்டுமே கீழமை நீதிமன்றங்களில் உள்ளதாகவும், மற்ற வழக்குகள் தற்போதுவரை விசாரணை நிலைக்கு வரவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    264 வழக்குகள் மீது உயர்நீதிமன்றங்களால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளில் இதுவரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், விசாரணையை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #PendingCases #SupremeCourt
    நாடு முழுவதும் 7 எம்பி-க்கள் 199 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு விவரங்களை வெளியிடவில்லை என்று ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி

    எம்பி-க்கள் மற்றும் எல்எல்ஏ-க்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் பான் கார்டு குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். 542 எம்பி-க்கள் மற்றும் 4086 எம்எல்ஏ-க்கள் ஆகியோர் தங்களது பான் கார்டு தகவலை தெரிவித்திருக்கிறார்களா? என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் அமைப்புகள் ஒரு ஆய்வறிக்கையை தயார் செய்ததது.

    இந்த ஆய்வறிக்கையில் 7 எம்பி-க்கள் 199 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு தகவலை தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. பான் கார்டு விவரங்களை சமர்பிக்காத மக்கள் பிரதிநிதிகளில், அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களே. காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த 51 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு விவரங்களை வெளியிடவில்லை. அதேபோல், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 42 எம்எல்ஏ-க்கள், சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்த 25 எம்எல்ஏ-க்கள் வெளியிடவில்லை.

    மாநில வாரியாக கேரளாவில் 33 எம்எல்ஏ-க்களும், மிசோரத்தில் (28), மத்திய பிரதேசத்தில் (19) எம்எல்ஏ-க்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

    ஒடிசாவில் இரண்டு எம்பி-க்களும், தமிழ்நாட்டில் இரண்டு எம்பி-க்களும் அசாம், மிசோரம், லட்சதீவு ஆகியவற்றில் இருந்து தலா ஒரு எம்பி-க்களும் பான்கார்டு விவரங்களை சமர்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் பான் கார்டு விவரங்களை சமர்பிக்காத இரண்டு எம்பி-க்களுமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
    காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் எம்.பி.க்களுக்கு பரிசு வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    பெங்களூரு:

    காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடகம், நாடாளுமன்றத்தில் விவாதித்து, அதன் வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறது. பாராளுமன்றம் தொடங்கும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து நாளை டெல்லியில் கர்நாடக மாநில எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் எம்.பி.க்களுக்கு சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன் (ஐ–போன்) பரிசாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆவணங்கள் வைக்கும் வகையில் விலை உயர்ந்த பேக் வழங்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.



    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “கர்நாடக எம்.பி.க்கள் கூட்டம் நாளை(இன்று) மாலை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அழைப்பிதழுடன் எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த செல்போன் பரிசாக வழங்கியதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு செல்போன் வழங்குமாறு அதிகாரிகளுக்கு நான் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஒருவேளை அவ்வாறு செல்போன் வழங்கப்பட்டு இருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதுபற்றி நான் விசாரிக்கிறேன்” என்றார்.

    இதற்கிடையே  என்னுடைய சொந்த செலவில் எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த செல்போனை தான் வழங்கியதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். வழங்கப்பட்ட செல்போனை பா.ஜனதாவை சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. திருப்பி அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக முதல்–மந்திரி குமாரசாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கர்நாடக எம்.பி.க்கள் கூட்டத்தை டெல்லியில் கூட்டி இருப்பதாக எனக்கு கர்நாடக அரசிடம் இருந்து அழைப்பு வந்தது. அத்துடன் ரூ.1 லட்சம் விலை மதிப்புள்ள ஒரு ‘ஐ போன்‘ அதாவது செல்போனை அனுப்பி இருக்கிறீர்கள்.

    அரசின் வீண் செலவுகளை குறைப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த செல்போனை பரிசாக வழங்கி இருக்கிறீர்கள். இது சரியா?. துப்புரவு தொழிலாளர்களுக்கு மாநில அரசால் சம்பளம் வழங்க முடியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் நான் அரசு வழங்கியுள்ள செல்போனை ஏற்பது இல்லை என்று முடிவு செய்துள்ளேன். அந்த போனை உங்களுக்கு திருப்பி அனுப்புகிறேன். நமது நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள தொடர்ந்து உழைத்து வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 
    பாராளுமன்றத்தில் ஒரு நாளைக்கு 5 கேள்விகள் மட்டுமே கேட்க அனுமதி அளிக்கப்படும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். #SumitraMahajan #parliament
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் இதுவரை ஒரு நாளைக்கு 10 கேள்விகள் வரை கேட்க எம்.பி.க்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்  ஒரு நாளைக்கு 5 கேள்விகள் மட்டுமே கேட்க அனுமதி அளிக்கப்படும் என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

    மக்களவை பொதுச் செயலாளர் சினேகலதா ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மக்களவையில் இதற்கு முன்பு எம்.பி.க்கள் நாள் ஒன்றுக்கு 10 கேள்விகள் வரை கேட்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அதிக கேள்விகள் குவிவதுடன், ஒரு சில எம்.பி.க்கள் கேள்வி கேட்க வாய்ப்பு கிடைப்பதில்லை. 

    எனவே தற்போது 5 கேள்விகள் மட்டுமே கேட்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் கேட்கும் எம்.பி.க்களின் கேள்விகள் பரிசீலிக்கப்பட்டு அடுத்த நாள் அவை சபையில் இடம்பெறும். இந்த உத்தரவு, வரும் மக்களவை கூட்டத்தொடரில் இருந்து அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. #SumitraMahajan #parliament
    ×