search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Criminal Laws"

    • தண்டனைக்குப் பதிலாக நீதி வழங்கப்படும். விரைவான விசாரணை மற்றும் தாமதம் இல்லாமல் நீதி வழங்கப்படும்.
    • முன்னதாக போலீஸ் உரிமை மட்டுமே பாதுகாக்கப்பட்டது. தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமை மற்றும் புகார் கொடுத்தவர்களின் உரிமை பாதுகாக்கப்படும்.

    இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    இந்த நிலையில் இந்திய உள்துறை மந்திரி அமித் ஷா மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து கூறியதாவது:-

    நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று குற்றவியல் நீதிச் சட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.

    புதிய குற்றவியல் நீதிச் சட்டங்கள் தொடர்பாக சந்தேகம் (கவலை எழுப்பும் எதிர்க்கட்சி தலைவர்கள்) எழுப்பும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

    மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பாக முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசியலை தாண்டி அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட 12 ஆயிரம் அதிகாரிகள் 22.5 லட்சத்திற்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களுக்கு பயிற்சி அளிக்க தயார் செய்யப்பட்டுள்ளனர்.

    தண்டனைக்குப் பதிலாக நீதி வழங்கப்படும். விரைவான விசாரணை மற்றும் தாமதம் இல்லாமல் நீதி வழங்கப்படும்.

    மூன்று குற்றவியல் நீதிச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் நவீன குற்றவியல் நீதி அமைப்புக்கு வழிவகுக்கும்.

    77 வருட சுதந்திர காலத்திற்குப் பிறகு சுதேசி முழுமை பெற்றுள்ளது. இந்தியாவின் நெறிமுறைகளை உள்ளடக்கியதாக உள்ளது.

    முன்னதாக போலீஸ் உரிமை மட்டுமே பாதுகாக்கப்பட்டது. தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமை மற்றும் புகார் கொடுத்தவர்களின் உரிமை பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதிய கிரிமினல் சட்டங்களை 'புல்டோசர் சட்டங்கள்' என்று விமர்சித்துள்ளார்.
    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது உள்ளே நுழைந்த மர்ம நபர் வண்ணப் புகை குண்டை வீசினார்.

    இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் இன்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சித் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே புதிய கிரிமினல் சட்டங்களை 'புல்டோசர் சட்டங்கள்' என்று விமர்சித்துள்ளார்.

     

    அவர் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியதாவது, 'மக்களவைத் தேர்தல் முடிவுகளால் மன ரீதியாக பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவினரும் அரசியலமைப்பை மதிப்பது போல் தற்போது நாடகமாடத்  தொடங்கியுள்ளனர்.

    ஆனால் உண்மை என்னவென்றால் தற்போது அமலுக்கு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களும் பாராளுமன்றதில் 146 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டதே ஆகும். எனவே இந்தியா கூட்டணி இந்த புல்டோசர் சட்டங்களை பாராளுமன்றத்தில் பொறுத்துக் கொண்டிருக்காது' என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது உள்ளே நுழைந்த மர்ம நபர் வண்ணப் புகை குண்டை வீசினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மத்திய அரசை எதிரித்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால் எதிர்கட்சிகளைச் சேர்ந்த மூன்றில் இரண்டு பங்கு எம்.பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எனவே எதிர்கட்சிகளை சேர்ந்த பெரும்பாலான எம்.பிக்கள் அவையில் இல்லாமலே புதிய கிரிமினல் சட்டங்களை அமல்படுத்தும் மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது. 

    • புதிய சட்டங்களில் பெரும்பாலான அம்சங்கள் பழைய சட்டங்களை வெட்டி ஒட்டியதுதான்
    • மற்றங்கள் செய்யப்பட்ட சில அம்சங்கள் அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது.

    இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் இன்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் புதிய சட்டங்களில்  பெரும்பாலான அம்சங்கள் பழைய சட்டங்களை வெட்டி ஒட்டியதுதான் என்று காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி பா.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

     

    புதிய சட்டங்கள் குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,

    'இன்று நடைமுறைக்கு வந்துள்ள 3 புதிய சட்டங்களில் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களை வெட்டி ஒட்டிய வேலை தான் நடந்துள்ளது. புதிய சட்டங்களில் உள்ள சில அம்சங்களை நங்கள் வரவேற்றோம். இதற்கு பழைய சட்டங்களில் சில திருத்தம் கொண்டு வந்திருந்தாலே போதும். அதை விட்டுவிட்டு புதிதாக 3 சட்டங்களை உருவாக்கியது வீண் வேலை.

    அதுமட்டுமின்றி புதிய சட்ட விதிகளில் சில முன்னுக்குப் பின்னான குழப்பங்கள் உள்ளது. மாற்றங்கள் செய்யப்பட்ட சில அம்சங்கள் அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது. இந்த அம்சங்கள் குறித்து பாராளுமன்ற நிலைக்குழுவில் உள்ள எம்.பிக்கள் கருத்து வேறுபாடு உள்ளதாக குறிப்பிட்டிருந்தும் அந்த விமர்சனங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. புதிய சட்டங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் எதுவும் பாராளுமன்றதில் நடைபெறவில்லை.

    சட்ட வல்லுனர்கள், பார் கவுன்சில் உறுப்பினர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பலர் புதிய சட்டங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியும் அவற்றை அரசு பொருட்படுத்தவில்லை. இதற்கு நேர் மாறாக எந்த விவாதமும் இன்றி புதிய சட்டங்களை அரசு தன்னிச்சையாக நிறைவேற்றியுள்ளது. இது அரசியலமைப்பின் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல்.

    இந்த புதிய சட்டங்கள் சிறிது காலத்துக்கு நீதிமன்றங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். மேலும் வருங்காலத்தில் இந்த புதிய சட்டங்களில் அரசியலமைப்புக்கு எதிராக உள்ள அம்சங்கள் நீக்கப்பட்டு நீதித்துறையின் கொள்கைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார். 

     

    • 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • சரியான நேரத்தில் விரைவான மற்றும் பிழையற்ற நீதியை வழங்கும்.

    ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றான புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இச்சட்டங்கள் அமலாக்கத்துக்கு தேவையான பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், `இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிவாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    சரியான நேரத்தில் விரைவான மற்றும் பிழையற்ற நீதியை வழங்கும் இந்த புதிய சட்டங்கள் வரும் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்' என்றார்.

    ×