search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "criminal cases"

    • வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
    • அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிடம் நன்னடத்தை ஜாமீன் பெற்றார்

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீஸ் நிலைய எல் லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, வழிப் பறி மற்றும் கஞ்சா விற்பனை ஆகிய வழக்கு களில் அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டை பகுதியை சேர்ந்ததிலிப் (வயது 26) என்பவரை கடந்த 11-ந் தேதி டவுன் போலீசார் கைது செய்தனர்.

    அப்போது அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிடம் நன்னடத்தை ஜாமீன் பெற்றார். ஜாமீன் பெற்ற மறுநாளே அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தில் நடைபெற்ற திரவுபதியம்மன் கோவில் திருவி ழாவில் பொதுமக்களிடம் பிரச்சினை செய்த தாக வந்த புகாரின் பேரில் அரகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து திலிப்பை சிறையில் அடைத்தனர்.

    இதனை தொடர்ந்து குற்றவியல் நடை முறை சட்ட பிரிவின் படி திலிப் நன்ன டைத்தை ஜாமீனை மீறிய குற்றத்திற்காக அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக் டர் (பொறுப்பு) லதா, அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா முன்பு திலிப்பை ஆஜர்படுத்தினார். அப்போது திலிப்பிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திலிப்பை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • டி.ஐ.ஜி. முத்துசாமி போலீசாருக்கு அறிவுரை
    • புலன் விசாரணை குறித்த பயிற்சி வகுப்புகள் இன்று முதல் 6 நாட்கள் நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்க ளுக்கு குற்ற வழக்குகளில் புலன் விசாரணை குறித்த பயிற்சி வகுப்புகள் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று முதல் 6 நாட்கள் நடக்கிறது.

    இந்த பயிற்சி வகுப்பை வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி இன்று காலை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

    குற்ற வழக்குகளில் திறம்பட செயல்படுவதற்காக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இங்கு கற்றுக் கொடுக்கப்படும் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். இது வழக்கு விசாரணைக்கு பெரிய உதவியாக இருக்கும்.

    குற்ற வழக்குகளில் புதிய தொழில்நுட்பங்களை கையாள தெரிந்து கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவது எப்படி என்பதை கற்று தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த பயிற்சி வகுப்பில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணன், பணியிடை பயிற்சி பள்ளி டி.எஸ்.பி. முருகன் மற்றும் தடயவியல், கைரேகை நிபுணர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    • காணொலிக்காட்சி மூலமாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா தொடங்கி வைத்தார்.
    • வழக்கறிஞர்களாக நடராஜன், லார்டு இங்கர்சல், கவுசல்யா, சந்தியா ஆகியோர் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.

    திருப்பூர் :

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழுவால் திருப்பூர் உள்பட 14 மாவட்டங்களில் உள்ள கோர்ட்டு வளாகங்களில் குற்றவியல் வழக்குகளுக்கான இலவச சட்ட உதவி வழக்கறிஞர்கள் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் இருந்து காணொலிக்காட்சி மூலமாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் மாற்றுமுறை தீர்வு மையத்தில் குற்றவியல் வழக்குகளுக்கான இலவச சட்ட உதவி வழக்கறிஞர்கள் அமைப்பு அலுவலகத்தை, முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வர்ணம் நடராஜன் தலைமையில், மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலு திறந்து வைத்தார்.

    இந்த அமைப்புக்கான வழக்கறிஞர்களாக நடராஜன், லார்டு இங்கர்சல், கவுசல்யா, சந்தியா ஆகியோர் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா, மாவட்ட குடும்ப நல நீதிபதி சுகந்தி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, முதன்மை சார்பு நீதிபதி செல்லதுரை, கூடுதல் சார்பு நீதிபதி மேகலா மைதிலி, நீதித்துறை நடுவர்கள் பழனிகுமார், முருகேசன், கார்த்திகேயன், ரஞ்சித்குமார், ஆதியான், திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் வக்கீல்கள் பழனிசாமி, சண்முகவடிவேல், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமானுஜபுரத்தை சேர்ந்த கவியரசன் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • கலெக்டர் உத்தரவுப்படி, கவியரசனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா ராமானுஜபுரத்தை சேர்ந்தவர் கவியரசன் (வயது 28).

    இவர் மீது போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இதையடுத்து இவரின் குற்றசெயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி, கவியரசனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

    • கருப்பூர் புறவழிச்சாலையில் உள்ள டீ கடையில் டீ அருந்திவிட்டு நின்று கொண்டிருந்த போது புண்ணிய மூர்த்தியை முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பியது.
    • பல்வேறு குற்ற வழக்குகள் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா சாலிய மங்கல ம்அருகே உள்ள களஞ்சே ரியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (வயது 42).

    இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் அம்மாபேட்டை காவல் நிலைய த்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கொர நாட்டு கருப்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்திருந்த போது இன்று காலை கருப்பூர் புறவழி ச்சாலையில் உள்ள டீ கடையில் டீ அருந்திவிட்டு நின்று கொண்டிருந்த போது புண்ணிய மூர்த்தியை முகமூடி அணிந்த இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியது.

    இதில் சம்பவ இடத்திலேயே புண்ணிய மூர்த்தி உயிரி ழந்தார்.தகவல யறிந்த உடனடியாக சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்த காவல்துறை துணை கண்காணி ப்பாளர்அசோ கன் மற்றும் தாலு கா காவல் நிலைய காவல்துறை யினர் புண்ணி யமூர்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்ப கோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இப்படு கொலை சம்பவம் தொடர்பாக தாலுக்கா காவல்து றையினர் தீவிர விசாரணை மே ற்கொண்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    வழிப்பறி உள்ளிட்ட குற்றவழக்குகளில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய, அடையாள அணிவகுப்பை நடத்த வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ChennaiHighcourt
    சென்னை:

    சென்னையில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த 2 பேரை வழிமறித்து, அவர்களிடம் இருந்து ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணம், கைக் கடிகாரம், மோட்டார் சைக்கிளை ஒரு கும்பல் கடந்த ஜனவரி 1-ந்தேதி வழிப்பறி செய்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த ஜனவரி 5-ந்தேதி வழிப்பறி கும்பலை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வழிப்பறி செய்த வாட்ச், மோட்டார் சைக்கிள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அரசு குற்றவியல் வக்கீல் கூறினார்.

    ஆனால், மனுதாரர்கள் அப்பாவிகள், போலீசார் வேண்டுமென்றே இவர்களை கைது செய்துவிட்டனர். தேவையில்லாமல் 30 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளனர் என்று மனுதாரர்கள் தரப்பு வக்கீல் வாதிட்டார்.

    பொதுவாக இதுபோன்ற வழக்குகளில், குற்றவாளிகளை பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அல்லது புகார்தாரர்களுக்கு தெரிவதே இல்லை. ஆனாலும், குற்றவாளிகளை போலீசார் கைது செய்து விடுகின்றனர்.



    அதேநேரம் உண்மை குற்றவாளிகளை கண்டறிய அடையாள அணிவகுப்பை போலீசார் நடத்துவது இல்லை. அடையாள அணிவகுப்பு நடத்தி, பாதிக்கப்பட்டர்கள் மூலம் உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காட்டப்படவேண்டும். எனவே, இதுபோன்ற வழக்குகளில் அடையாள அணிவகுப்பை போலீசார் நடத்த வேண்டும். இந்த வழக்கில், புலன் விசாரணை முடியும் தருவாயில் உள்ளதால், மனுதாரர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #ChennaiHighcourt
    எம்எபி, எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PendingCases #SupremeCourt
    புதுடெல்லி:

    குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட  அரசியல்  தலைவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க கோரி, வழக்கறிஞரும் பாஜக தலைவருமான அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை அமிகஸ் கியூரியாக நியமித்தது.

    அஸ்வினி உபாத்யாய்

    இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நாடு முழுவதிலும் பல்வேறு நீதிமன்றங்களில் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    நாடு முழுவதிலும் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்பி,எம்எல்ஏக்களுக்கு எதிராக மொத்தம் 4122 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டிலேயே எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக 321 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 71 வழக்குகள் மட்டுமே கீழமை நீதிமன்றங்களில் உள்ளதாகவும், மற்ற வழக்குகள் தற்போதுவரை விசாரணை நிலைக்கு வரவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    264 வழக்குகள் மீது உயர்நீதிமன்றங்களால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளில் இதுவரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், விசாரணையை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #PendingCases #SupremeCourt
    ×