குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

ராமானுஜபுரத்தை சேர்ந்த கவியரசன் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.கலெக்டர் உத்தரவுப்படி, கவியரசனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா ராமானுஜபுரத்தை சேர்ந்தவர் கவியரசன் (வயது 28).

இவர் மீது போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இதையடுத்து இவரின் குற்றசெயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி, கவியரசனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com