கொலை முயற்சி - பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.. 28 புதிய அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள்

புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் 39 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதுபந்தி சஞ்சய் குமார், தாக்கூர், மஜூம்தார், சுரேஷ் கோபி ஜூசால் ஓரம் ஆகிய 5 அமைச்சர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளது.
கொலை முயற்சி - பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.. 28 புதிய அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள்
Published on

இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மோடி 3 வது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றார். அவருடன் 72 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

இந்த 72 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவர்களில் 19 பேர் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றம், கலவரத்தைத் தூண்டும் வெறுப்பு பேச்சு ஆகிய கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என ஜனநாயக சீர்திருத்த சங்கம் [ ADR ] அறிக்கை வெளியிட்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாந்தனு தாக்கூர் மற்றும் தென் கிழக்கு பகுதிகளின் கல்வி - மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க எம்.பி சுகந்தா மஜூம்தார் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி குற்றம் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

28 அமைச்சர்களில் பந்தி சஞ்சய் குமார், தாக்கூர், மஜூம்தார், சுரேஷ் கோபி ஜூசால் ஓரம் ஆகிய 5 அமைச்சர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளது. 8 அமைச்சர்கள் மீது வெறுப்பு பேச்சு வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆக புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் 39 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com