என் மலர்
நீங்கள் தேடியது "Pan card"
- ஆதார்-பான் எண்ணை இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை ரூ.1000 அபராதம் செலுத்தி பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம்.
புதுடெல்லி:
ஒவ்வொருவரும் தன்னுடைய பான் கார்டு எண்ணை ஆதார் கார்டு எண்ணுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த இரு எண்களையும் இணைப்பதற்கு கடந்த மார்ச் 31-ந் தேதி வரை வருமான வரித்துறை அலுவலகம் அவகாசம் அளித்தது. அதன் பிறகு அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கடந்த மார்ச் 31-ந் தேதிக்கு பிறகு பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தற்போது ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த ரூ.500 அபராதத்துடன் பான் எண், ஆதார் எண்ணை இணைக்க ஜூன். 30-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு அபராதம் ரூ.1000 என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.500 அபராதத்துடன் கூடிய காலக்கெடு இன்றுடன் முடிகிறது.
எனவே நாளை (1-ந் தேதி) முதல் இரண்டையும் இணைக்க அபராதம் ரூ.1000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை ரூ.1000 அபராதம் செலுத்தி பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம். அதற்குள் இணைக்காவிட்டால் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பான் கார்டு செயலற்றதாக மாறி விடும். அதன்பிறகு பான் எண்ணை எதிலும் பயன்படுத்த முடியாமல் போய் விடும் என்றும் வருமான வரித்துறை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வெற்றியூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவர் சிவகங்கை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது வீடு காரைக்குடி போலீஸ் காலனியில் உள்ளது. இவர் கடந்த 2008-ம் ஆண்டு வருமான வரித்துறை மூலம் பான் கார்டு பெற்றுள்ளார். அதன் எண் CCOPS0932F. இந்த எண்ணையே தனது வங்கி கணக்குகளுடன் இணைத்து உள்ளார்.
இந்த நிலையில் சேகர், வீடு கட்டுவதற்கு திட்டமிட்டு அங்குள்ள வங்கியில் வீட்டுக்கடன் கேட்டு விண்ணப்பித்தார். அதனை ஆய்வு செய்த வங்கி மேலாளர், “பல இடங்களில் நீங்கள் கடன் வாங்கி நிலுவை வைத்து இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு கடன் தர இயலாது” என மறுத்துவிட்டார். ஆனால் சேகர், “நான் எங்கும் இதுவரை கடன் வாங்க வில்லை” என்று மறுத்துள்ளார்.
உடனே வங்கி மேலாளர், அதற்கு ஆதாரமாக சிபில் (ஒருவரின் கடன் பற்றிய தகவல்கள்) அறிக்கையை கொடுத்துள்ளார். அதில் சேகர் காஞ்சீபுரம் மாவட்டம் ஏனாத்தூர் வங்கி ஒன்றில் கடன் வாங்கி நிலுவை வைத்திருப்பதாக தகவல் இருந்தது. உடனே சேகர், ஏனாத்தூரில் உள்ள வங்கிக்கு நேரிடையாக சென்று மேலாளரிடம், “நான் உங்கள் வங்கியில் கடன் வாங்கவே இல்லை. ஆனால் எனது பெயரில் உங்களது வங்கியில் எப்படி கடன் நிலுவை உள்ளது” என்று கேட்டு உள்ளார்.
அதன் அடிப்படையில் வங்கி மேலாளர் இதுகுறித்து ஆய்வு செய்தார். அப்போது அந்த வங்கியில் கடன் வாங்கி நிலுவை வைத்திருப்பது ஏனாத்தூர் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் சேகர் என்ற காண்டிராக்டர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் வங்கிக்கு வழங்கிய பான்கார்டு எண்ணும், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் பான்கார்டு நம்பரும் ஒன்றாக இருப்பது தெரியவந்தது. இருவருக்கும் ஒரே எண்ணில் பான்கார்டு இருந்ததால் தான் காண்டிராக்டர் சேகர் வாங்கிய கடன், சப்-இன்ஸ்பெக்டர் சேகரின் சிபில் அறிக்கையில் எதிரொலித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரே எண்ணில் இருவருக்கும் எப்படி பான்கார்டு வழங்கப்பட்டது என்பது குறித்து நடந்த மேல் விசாரணையில் பல அதிசயங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது காண்டிராக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரின் பெயரும் சேகர் என்பது தான். அடுத்ததாக இவர்கள் இருவரும் ஒரே தேதியில் பிறந்துள்ளனர். இவர்கள் பிறந்த தேதி 17-05-1966. அதன் தொடர்ச்சியாக இருவரின் பெற்றோர் பெயரும் ஒன்றே. இருவரின் தந்தை பெயரும் சுப்பிரமணியன். தாய் பெயர் சரோஜா.
இந்த காரணங்களால் தான் இரண்டு பேருக்கும் ஒரே எண்ணில் வருமான வரித்துறை பான்கார்டு வழங்கி உள்ளது. இந்த குளறுபடி குறித்து சப்-இன்ஸ்பெக்டர் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன் காரணமாக அவர் வங்கி கடன் கேட்டு விண்ணப்பித்த மனுவும் நிலுவையில் உள்ளது. #PANCard
எம்பி-க்கள் மற்றும் எல்எல்ஏ-க்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் பான் கார்டு குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். 542 எம்பி-க்கள் மற்றும் 4086 எம்எல்ஏ-க்கள் ஆகியோர் தங்களது பான் கார்டு தகவலை தெரிவித்திருக்கிறார்களா? என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் அமைப்புகள் ஒரு ஆய்வறிக்கையை தயார் செய்ததது.
இந்த ஆய்வறிக்கையில் 7 எம்பி-க்கள் 199 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு தகவலை தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. பான் கார்டு விவரங்களை சமர்பிக்காத மக்கள் பிரதிநிதிகளில், அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களே. காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த 51 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு விவரங்களை வெளியிடவில்லை. அதேபோல், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 42 எம்எல்ஏ-க்கள், சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்த 25 எம்எல்ஏ-க்கள் வெளியிடவில்லை.
மாநில வாரியாக கேரளாவில் 33 எம்எல்ஏ-க்களும், மிசோரத்தில் (28), மத்திய பிரதேசத்தில் (19) எம்எல்ஏ-க்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
ஒடிசாவில் இரண்டு எம்பி-க்களும், தமிழ்நாட்டில் இரண்டு எம்பி-க்களும் அசாம், மிசோரம், லட்சதீவு ஆகியவற்றில் இருந்து தலா ஒரு எம்பி-க்களும் பான்கார்டு விவரங்களை சமர்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் பான் கார்டு விவரங்களை சமர்பிக்காத இரண்டு எம்பி-க்களுமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
வருமான வரி கணக்கு எண்ணுடன் (‘பான்’) ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டு இருக்கிறது.
இந்த நிலையில், கடந்த 24-ந் தேதி வரை இந்தியா முழுவதும் 21 கோடியே 8 லட்சத்து 16 ஆயிரத்து 676 வருமான வரி கணக்கு எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளன.

இந்த தகவலை வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். #PanCard #AadhaarCard #Linked
உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்கும் நோக்கில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது ஆதார் அட்டை திட்டம். அதனடிப்படையில், இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களுக்கு 12 இலக்க எண் பொறித்த ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களிடம் விரைவாக ஆதார் அட்டை திட்டத்தை கொண்டு சேர்த்த மாநிலங்களுக்கு ஆதார் நிறுவனம் சிறப்பு விருதுகளை அறிவித்துள்ளது.
ஆதார் அட்டை திட்டத்தில், மக்களின் பத்து கைவிரல் ரேகைகள், பெயர், முகவரி, குடும்ப உறுப்பினர் உள்ளிட்ட தகவல்களை மிக விரைவாக பதிவு செய்ததற்காக பஞ்சாப், பீகார் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களும், ஆதார் அட்டைகளை மிக விரைவாக தபால் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காக மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களும் சிறப்பு விருதுகளை பெறவுள்ளது.