search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "income tax notice"

    • வருமான வரித்துறை சார்பில் ரூ.1,823 கோடி செலுத்துமாறு காங்கிரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
    • 139 ஆண்டுகால பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியை முடக்க சதி நடக்கிறது என ப.சிதம்பரம் கண்டித்துள்ளார்.

    புதுடெல்லி:

    வருமான வரித்துறை சார்பில் சுமார் 1,823 கோடி ரூபாய் செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி ஆகியவை தொடர்பாக 1,823 கோடி ரூபாய் கட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இந்த நோட்டீஸ் வரி தீவிரவாதம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    139 ஆண்டுகால பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியை முடக்க சதி நடக்கிறது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், வருமான வரி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    • காங்கிரஸ் கட்சி ரூ.1,823 கோடி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்.
    • காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ்.

    ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக பழைய பான் எண்ணை (PAN Number) பயன்படுத்தி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிபப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சி ரூ.1,823 கோடி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கு எதிரான வருமான வரித்துறை நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் 2011-12-ம் ஆண்டிற்கான வருமான வரிக்கணக்கை மறு ஆய்வு செய்வதற்காக கணக்கு விவரங்களுடன் நேரில் ஆஜராகும்படி வருமான வரித்துறை கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    ஆனால், வரி கணக்கை மீண்டும் கணக்கிடுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். அதில், தான் முறையாக வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்திருப்பதால், வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்களை ரத்து செய்து உத்தரவிடவேண்டும் எனக் கூறியிருந்தார்.



    இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரத்துக்கு எதிரான வருமான வரித்துறை நோட்டீசுக்கு நீதிமன்றம்  தடை விதித்தது. இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரையில், நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2009-2010, 2010-11ம் ஆண்டுகளுக்கான வரிக்கணக்கை மறு ஆய்வு செய்வது தொடர்பாக அனுப்பிய நோட்டீஸ்களை ஏற்கனவே உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
    ×