search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seller"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அரசு மதுபான கடையின் அருகில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 76 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அரசு மதுபான கடையின் அருகில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அங்காளக் கோட்டை பகுதியை சேர்ந்த ரகுபதிராஜா (25), சொக்கநாதபுரம் அருகே போரடப்பு பகுதியை சேர்ந்த அஜித் (25), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கேத்தங்கால் தெற்கு தெருவை சேர்ந்த காளீஸ்வரன் (20) ஆகிய 3 பேர் மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 76 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளைச்சிறையில் அடைத்தனர்.

    • டாஸ்மாக் மதுக்கடையில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
    • அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. ஒருவரை யொருவர் தாக்கிக்கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே வையப்பமலையில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் கடையில் இருந்தபோது மல்லசமுத்திரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (45) என்பவர் வந்து மது வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை சிவக்குமார் கேட்டபோது என்னிடம் பணம் இல்லை, ஏ.டி.எம். கார்டு தான் உள்ளது, மிஷினில் ஸ்வைப் செய்து பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு செந்தில்குமார் தெரிவித் துள்ளார். அதற்கு விற்பனை யாளர் ஸ்வைப்பிங் மிஷின் பழுதடைந்துள்ளதால் பணமாக கொடுக்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. ஒருவரை யொருவர் தாக்கிக்கொண்ட னர். திடீரென செந்தில்கு மார் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து டாஸ்மாக் விற்பனையாளர் சிவக்குமார் தலையில் தாக்கினார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து அவர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் தாக்குதலில் காயம் அடைந்ததாக கூறி செந்தில்குமாரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வழக்குப்பதிவு

    இது குறித்த புகாரின்பேரில் எலச்சிப்பா ளையம் ேபாலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜசேகர் ரெட்டி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • ராஜசேகர் ரெட்டிக்கு தெரிந்த நபர்கள் தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மதனப்பள்ளி அருகே உள்ள போடிமல்லதின்னா கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி. இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் தக்காளி பயிரிட்டு சந்தையில் விற்பனை செய்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு அவதி அடைந்து வந்தார்.

    இந்நிலையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கடந்த 20 நாட்களில் ராஜசேகர் ரெட்டிக்கு ரூ.30 லட்சம் வருவாய் கிடைத்தது. இதனால் ராஜசேகர் ரெட்டி திடீரென லட்சாதிபதியானார்.

    நேற்று ராஜசேகர் ரெட்டி தக்காளி வியாபாரத்தை முடித்துக் கொண்டு வசூலான பணத்துடன் தனது பைக்கில் வந்தார். அவரை மர்மநபர்கள் வழி மறித்தனர்.

    அவரை கை, கால்களை கட்டி மறைவான இடத்திற்கு கடத்தி சென்றனர். அங்கு ராஜசேகர ரெட்டியிடம் பணத்தைக் கேட்டு அடித்து துன்புறுத்தினர்.

    அவர் பணத்தைக் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் ராஜசேகர் ரெட்டியை அடித்து கொலை செய்தனர்.

    பின்னர் பிணத்தை வீசிவிட்டு சென்றனர். அந்த வழியாக சென்றவர்கள் ராஜசேகர் ரெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு மதனப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜசேகர் ரெட்டி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ராஜசேகர ரெட்டியிடம் உள்ள ரூ.30 லட்சத்தை பறிக்க அவரை கடத்திச் சென்று துன்புறுத்தியதாகவும் பணம் தர மறுத்ததால் அவரை கொலை செய்து வீசியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    ராஜசேகர் ரெட்டிக்கு தெரிந்த நபர்கள் தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
    • டாஸ்மாக் சில்லறை விற்பனை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    மயிலாடுதுறை:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக விற்பனை செய்யப்படும் சம்பவம் அரங்கேறி வந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி. விலையை விட கூடுதலாக விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

    இந்த நிலையில் மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி ஆக்கூர் முக்கூட்டில் இயங்கிவரும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

    அதனையடுத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மோசடி நடவடிக்கைகளை தடுத்தல் மற்றும் கண்டுபிடிப்பதற்கான விதித்தொகுப்பு 2014ன் கீழ் அரசு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஆக்கூர் டாஸ்மாக் கடை உதவி விற்பனையாளர் ரவிச்சந்திரனை சஸ்பெண்டு செய்து நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத் தூர் அருகே கருங்கலூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கொளத்தூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கருங்கல்லூர் அருகே காளையனூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத் தூர் அருகே கருங்கலூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கொளத்தூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து கொளத்தூர் போலீசார் கருங்கல்லூர் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, கருங்கல்லூர் அருகே காளையனூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயசு 45) என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

    • எருமபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
    • வீட்டில் இருந்த 1¾ கிலோ கஞ்சா மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம், 2 பவுன் தங்கச் செயின் மற்றும் ½ பவுன் மோதிரம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிபாளையம் அருகே எருமபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

    இதில் சண்முகம் (வயது 39) என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அந்த வீட்டில் இருந்த 1¾ கிலோ கஞ்சா மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம், 2 பவுன் தங்கச் செயின் மற்றும் ½ பவுன் மோதிரம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சண்முகத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பள்ளிபாளையம் போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது நுழைவுபாலம் அருகே 2 பேர் கையில் பையுடன் நின்றுகொண்டு இருந்தனர்.
    • சந்தேகப்பட்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் வைத்திருந்த பையில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி நுழைவு பாலம் அருகே பள்ளிபாளையம் போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது நுழைவுபாலம் அருகே 2 பேர் கையில் பையுடன் நின்றுகொண்டு இருந்தனர். சந்தேகப்பட்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் வைத்திருந்த பையில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் காவேரி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 26) என்பதும் அதேபகுதியை சேர்ந்த மற்றொருவர் நீலகண்டன் (30) ஆகிய 2 பேரும் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • தாரமங்கலம் அருகிலுள்ள அழகுசமுத்திரம் ஏரிக்கோடி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
    • போலீசார் அழகேசனை பிடித்து கைது செய்து அவரிடம் இருந்து பணம் ரூ.1100-யை பறிமுதல் செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள அழகுசமுத்திரம் ஏரிக்கோடி பகுதியைசேர்ந்த அழகேசன் (வயது 65). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து சென்ற தாரமங்கலம் போலீசார் அழகேசனை பிடித்து கைது செய்து அவரிடம் இருந்து பணம் ரூ.1100-யை பறிமுதல் செய்தனர்.

    • ஆலங்குளம் அருகே உள்ள நாலாங்கட்டளை கிராமத்தில் தீர்த்தாரபுரம் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.
    • நேற்று கடைக்கு வந்த மதுப்பிரியர் ஒருவர் 590 ரூபாய்க்கு மது வாங்கியுள்ளார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள நாலாங்கட்டளை கிராமத்தில் தீர்த்தாரபுரம் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.

    அங்கு விற்பனையாளராக செல்வம் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று கடைக்கு வந்த மதுப்பிரியர் ஒருவர் 590 ரூபாய்க்கு மது வாங்கியுள்ளார். ரூ.600 கொடுத்து மீதி 10 ரூபாய் சில்லரை கேட்டுள்ளார்.

    அதற்கு செல்வம் மது வாங்கியதற்கு மொத்த ரூபாயும் சரியாக போய்விட்டது என்றும் மீதி சில்லரை இல்லை என்றும் செல்வம் கூறியுள்ளார். அதற்கு மது பிரியர் மது வாங்கியதற்கான கணக்குகளை திரும்ப அவரிடம் சொல்லி மீதி 10 ரூபாய் கேட்டுள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த விற்பனையாளர் செல்வம் மதுக்கடையின் உள்ளிருந்து கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து மது பிரியரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு தாக்கவும் முற்பட்டார். இதனை அருகில் இருந்த மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    செல்வம் ஏற்கனவே ஆலங்குளம் அருகே மதுக்கடையில் வேலை பார்க்கும் பொழுது மது பிரியர் ஒருவரை சில்லரை கேட்டதற்காக அடித்து உதைத்த வீடியோ சிசிடிவி காட்சிகள் வெளியாகி சிறிது காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பணியில் சேர்ந்து அதே பாணியை கடைபிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



    • அனுமதியின்றி மது பாட்டில்களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த பழனிச்சாமியை பவானி போலீஸார் கைது செய்தனர்.
    • விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சித்தோடு:

    பவானி உதவி ஆய்வாளர் ரகுநாதன் மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் பவானி செங்கோடன் டீக்கடை வீதி பகுதிக்கு சென்று உள்ளனர்.

    அப்போது அந்த இடத்தில் கந்தசாமி மகன் பழனிச்சாமி (52) தமிழக அரசு அனுமதியின்றி பல்வேறு வகையான மது பாட்டில்களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து பழனிச்சாமி யை பவானி போலீஸார் கைது செய்தனர்.

    விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மேட்டுப்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட இணைய வழி லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்து வந்தனர்.
    • இதையறிந்த போலீசார் லாட்டரி விற்றவரை கைது செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது46). இவர், தினந்தோறும் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள ஒரு மளிகை கடை முன் நின்று கொண்டு, தடை செய்யப்பட்ட இணைய வழி லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் வாழப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார், சசிகுமாரை கையும், களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

    • மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • மதுபாட்டில் மற்றும் பணம் பறிமுதல்

    திசையன்விளை:

    திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ், ஏட்டு தங்கராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை திசையன்விளை பைபாஸ் சாலை பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அரசு மதுபான கடையில் மதுபாட்டில்களை வாங்கி அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த தோப்புவிளையை சேர்ந்த ஜோசப் எழிலரசன் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து மதுபாட்டில்களையும், மதுவிற்பனை செய்து வைத்து இருந்த ரொக்க பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×