வீட்டில் பதுக்கி கஞ்சா விற்றவர் கைது

எருமபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.வீட்டில் இருந்த 1¾ கிலோ கஞ்சா மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம், 2 பவுன் தங்கச் செயின் மற்றும் ½ பவுன் மோதிரம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
வீட்டில் பதுக்கி கஞ்சா விற்றவர் கைது
Published on

சேலம்:

சேலம் கிச்சிபாளையம் அருகே எருமபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

இதில் சண்முகம் (வயது 39) என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அந்த வீட்டில் இருந்த 1¾ கிலோ கஞ்சா மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம், 2 பவுன் தங்கச் செயின் மற்றும் ½ பவுன் மோதிரம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட சண்முகத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com