மல்லசமுத்திரம் அருகே பீர் பாட்டிலால் தாக்கி டாஸ்மாக்விற்பனையாளர் மண்டை உடைப்பு

டாஸ்மாக் மதுக்கடையில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. ஒருவரை யொருவர் தாக்கிக்கொண்டனர்.
மல்லசமுத்திரம் அருகே பீர் பாட்டிலால் தாக்கி டாஸ்மாக்விற்பனையாளர் மண்டை உடைப்பு
Published on

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே வையப்பமலையில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று அவர் கடையில் இருந்தபோது மல்லசமுத்திரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (45) என்பவர் வந்து மது வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை சிவக்குமார் கேட்டபோது என்னிடம் பணம் இல்லை, ஏ.டி.எம். கார்டு தான் உள்ளது, மிஷினில் ஸ்வைப் செய்து பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு செந்தில்குமார் தெரிவித் துள்ளார். அதற்கு விற்பனை யாளர் ஸ்வைப்பிங் மிஷின் பழுதடைந்துள்ளதால் பணமாக கொடுக்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. ஒருவரை யொருவர் தாக்கிக்கொண்ட னர். திடீரென செந்தில்கு மார் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து டாஸ்மாக் விற்பனையாளர் சிவக்குமார் தலையில் தாக்கினார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

இதையடுத்து அவர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் தாக்குதலில் காயம் அடைந்ததாக கூறி செந்தில்குமாரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வழக்குப்பதிவு

இது குறித்த புகாரின்பேரில் எலச்சிப்பா ளையம் ேபாலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com