என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது
- அனுமதியின்றி மது பாட்டில்களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த பழனிச்சாமியை பவானி போலீஸார் கைது செய்தனர்.
- விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சித்தோடு:
பவானி உதவி ஆய்வாளர் ரகுநாதன் மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் பவானி செங்கோடன் டீக்கடை வீதி பகுதிக்கு சென்று உள்ளனர்.
அப்போது அந்த இடத்தில் கந்தசாமி மகன் பழனிச்சாமி (52) தமிழக அரசு அனுமதியின்றி பல்வேறு வகையான மது பாட்டில்களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து பழனிச்சாமி யை பவானி போலீஸார் கைது செய்தனர்.
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story






