search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skull fracture"

    • சேலம் கோரி மேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற கிட்டாமணி (30), பிரபல ரவுடி, இவர் தற்போது கார் வைத்து வாடகைக்கு இயக்கி வருகிறார்.
    • மகாவிஷ்ணு தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகாவிஷ்ணு, மணிகண்டன் தலையில் கம்பியால் சரமாரியாக தாக்கினார்.

    சேலம்:

    சேலம் கோரி மேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற கிட்டாமணி (30), பிரபல ரவுடி, இவர் தற்போது கார் வைத்து வாடகைக்கு இயக்கி வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மகாவிஷ்ணு. இவர் நேற்று மணிகண்டன் காரை வாடகைக்கு கேட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மணிகண்டன் காருக்கு டீசல்போட்டு தயாராக வைத்துள்ளார். ஆனால் மகாவிஷ்ணு , மணிகண்டன் காரை எடுக்காமல் வேறு நபரிடம் வாடகை காரை எடுத்து சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், மகாவிஷ்ணுவின் சகோதரியிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கினார். இது குறித்து மகாவிஷ்ணு தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகாவிஷ்ணு, மணிகண்டன் தலையில் கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் படு காயம் அடைந்த மணிகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • முன்விரோத கரணத்தால் விபரீதம்
    • போலீசார் ஜெயிலில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் ஆசனம்பட்டு ரோடு பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் சங்கர் வயது (32) ஆட்டோ டிரைவர்.

    இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஆதீல் அஹமது (33) ஷூ கம்பனி தொழிலாளி என்பவருடன் முன்விரோதம் இருந்தது. நேற்று இரவு சங்கரை வழி மடக்்கி ஆதீல்அஹமது சரமாரியாக தாக்கியதில் சங்கருக்கு மண்டை உடைந்து அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆதீல் அஹமதுவை ஆம்பூர் டவுன் போலீசார் கைது ஜெயிலில் அடைத்தனர்.

    • டாஸ்மாக் மதுக்கடையில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
    • அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. ஒருவரை யொருவர் தாக்கிக்கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே வையப்பமலையில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் கடையில் இருந்தபோது மல்லசமுத்திரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (45) என்பவர் வந்து மது வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை சிவக்குமார் கேட்டபோது என்னிடம் பணம் இல்லை, ஏ.டி.எம். கார்டு தான் உள்ளது, மிஷினில் ஸ்வைப் செய்து பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு செந்தில்குமார் தெரிவித் துள்ளார். அதற்கு விற்பனை யாளர் ஸ்வைப்பிங் மிஷின் பழுதடைந்துள்ளதால் பணமாக கொடுக்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. ஒருவரை யொருவர் தாக்கிக்கொண்ட னர். திடீரென செந்தில்கு மார் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து டாஸ்மாக் விற்பனையாளர் சிவக்குமார் தலையில் தாக்கினார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து அவர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் தாக்குதலில் காயம் அடைந்ததாக கூறி செந்தில்குமாரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வழக்குப்பதிவு

    இது குறித்த புகாரின்பேரில் எலச்சிப்பா ளையம் ேபாலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • 5 பேர் கைது
    • சாமி தீபாராதனை காட்டுவதில் தகராறு

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த பெரும்பள்ளம் பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பத்மநாபன் (வயது 60). அதே பகுதியில் பச்சையம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் திருவிழா நடப்பதால் சாமி வீதி உலா வருகிறது. இந்த நிலையில் பத்மநாபன் சாமி வீதி உலா வரும்போது வீடு வீடாக தீபாராதனை காட்டலாம் என கூறியுள்ளார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் பத்மநாபனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமா ரியாக தாக்கினர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை தடுக்க வந்த பத்மநாபன் மகன் ஜெயபிர காஷையும் தாக்கினார்.

    மேலும் கணேசனின் ஆதர வாளர்கள் விஜய், கருணாக ரன், ஆறுமுகம், ரமேஷ்,

    ஏகாம்பரம், பசுபதி, அருள் ஆகிய 7 பேரும் தந்தை, மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

    படு காயமடைந்த தந்தை, மகனை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அதேபோல் பத்ம நாபன் ஆதரவாளர்களான ஜெயபிரகாஷ், ஜெயசிம்மன், தமிழ்ச்செல்வன், மணிகண்டன் ஆகிய 5 பேரும் கணேஷ் மற்றும் அவரது உறவினர் விஜயை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவர்கள் வேலூர் அரசு மருத் துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து பத்மநா பன் தரப்பில் அவரது மகன் ஜெயபிரகாஷூம், கணேசன் தரப்பில் அவ ரது சகோதரர் ஆறுமுகமும் செய்யாறு போலீசில் தனிதனியாக புகார் செய்தனர்.

    புகாரின்பேரில் கணேச னின் உறவினர்களான கருணாகரன், ஆறுமுகம், ரமேஷ், ஏகாம்பரம், பசு பதி ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீஸ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் சினிமா பாடல் பாடி அதற்கேற்ப பெஞ்சில் தாளம் தட்டி விளையாடி உள்ளனர்.
    • மாணவர்களின் சத்தத்தை கேட்டு வகுப்பறைக்கு ஆசிரியர்கள் ஓடி வந்தனர்.

    கோவை :

    கோவை அருகே ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் சினிமா பாடல் பாடி அதற்கேற்ப பெஞ்சில் தாளம் தட்டி விளையாடி உள்ளனர்.

    இரு தரப்பாக பிரிந்துகொண்டு போட்டி போட்டுக் கொண்டு பாடல் பாடி டெஸ்கில் தாளம் தட்டி விளையாடினர். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் வகுப்பறைக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதில் பூலுவபட்டி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சாரதி (14) என்ற மாணவனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மாணவர்களின் சத்தத்தை கேட்டு வகுப்பறைக்கு ஆசிரியர்கள் ஓடி வந்தனர்.

    பின்னர் மாணவர்களை கட்டுப்படுத்தினர்.காயம் அடைந்த மாணவரை மீட்டு உடனடியாக பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஒழுங்கீனங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது தலைமை ஆசிரியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதே பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளியின் வெளியே மாணவர்கள் இரு தரப்பாக மோதி கொண்டனர். அதனை வேடிக்கை பார்த்த மாணவர் ஒருவர் கழுத்தில் கத்திபட்டு பரிதாபமாக இறந்தார். இதில் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் அதே பள்ளியில் வகுப்பறைக்குள் மாணவர்கள் மோதி கொண்ட சம்பவம் அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இரும்பு கம்பியால் அடித்து கணவரின் மண்டையை உடைத்த மனைவி.
    • செல்போன் பேசியதை கண்டித்த கணவரை, மனைவி அடித்து காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே பன்னியான் பகுதியைச் சேர்ந்தவர் பட்டுராஜா (வயது 49) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி (29) இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஜெயலட்சுமி இரவு 11 மணி அளவில் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனை கவனித்த பட்டுராஜா நள்ளிரவு நேரத்தில் யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டு கண்டித்துள்ளார்.

    இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயலட்சுமி இரும்பு கம்பியால் கணவரின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் பட்டுராஜா படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் மீ்ட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

    இது தொடர்பாக பட்டுராஜா செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயலட்சுமியை கைது செய்தனர். செல்போன் பேசியதை கண்டித்த கணவரை, மனைவி அடித்து படுகாயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு
    • காசு இல்லை பிறகு வாங்கி தருவதாக கூறினார்.

    கோவை, ஜூன்.8-

    பொள்ளாச்சி எறிப்பட்டி மதுரை வீரன் கோவில் வீதியை ேசர்ந்தவர் முருகன் (வயது 27). கூலி தொழிலாளி. இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்தவர் வீரன் (41). கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று முருகன் வீட்டின் அருகே நின்றிருந்தார். அப்போது வீரன் அங்கு வந்தார். சிறிது நேரம் முருகனிடம் பேசி கொண்டு இருந்தார். பின்னர் தனக்கு சாப்பிட பஜ்ஜி வாங்கி தருமாறு கேட்டார்.

    அதற்கு முருகன் தன்னிடம் தற்போது காசு இல்லை பிறகு வாங்கி தருவதாக கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்த வீரனின் மனைவி கொண்டம்மா (40) மற்றும் மகள் சத்தியா (21) அங்கு வந்தனர்.

    அவர்களும் முருகனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் முருகனை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த கல்லை எடுத்து சரமாறியாக தாக்கி மண்டையை உடைத்தனர்.

    பலத்த காயமடைந்த அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டு சுருண்டு விழுந்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து முருகன் நெகமம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கணவன்-மனைவி- மகள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×