பொள்ளாச்சியில் பஜ்ஜி வாங்கி தரமறுத்த உறவினரின் மண்டை உடைப்பு

பெண்கள் உள்பட 3 பேர் மீது வழக்குகாசு இல்லை பிறகு வாங்கி தருவதாக கூறினார்.
பொள்ளாச்சியில்  பஜ்ஜி வாங்கி தரமறுத்த உறவினரின் மண்டை உடைப்பு
Published on

கோவை, ஜூன்.8-

பொள்ளாச்சி எறிப்பட்டி மதுரை வீரன் கோவில் வீதியை ேசர்ந்தவர் முருகன் (வயது 27). கூலி தொழிலாளி. இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்தவர் வீரன் (41). கூலி தொழிலாளி.

சம்பவத்தன்று முருகன் வீட்டின் அருகே நின்றிருந்தார். அப்போது வீரன் அங்கு வந்தார். சிறிது நேரம் முருகனிடம் பேசி கொண்டு இருந்தார். பின்னர் தனக்கு சாப்பிட பஜ்ஜி வாங்கி தருமாறு கேட்டார்.

அதற்கு முருகன் தன்னிடம் தற்போது காசு இல்லை பிறகு வாங்கி தருவதாக கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்த வீரனின் மனைவி கொண்டம்மா (40) மற்றும் மகள் சத்தியா (21) அங்கு வந்தனர்.

அவர்களும் முருகனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் முருகனை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த கல்லை எடுத்து சரமாறியாக தாக்கி மண்டையை உடைத்தனர்.

பலத்த காயமடைந்த அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டு சுருண்டு விழுந்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து முருகன் நெகமம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கணவன்-மனைவி- மகள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com