என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரும்பு கம்பியால் அடித்து கணவரின் மண்டையை உடைத்த பெண்
- இரும்பு கம்பியால் அடித்து கணவரின் மண்டையை உடைத்த மனைவி.
- செல்போன் பேசியதை கண்டித்த கணவரை, மனைவி அடித்து காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே பன்னியான் பகுதியைச் சேர்ந்தவர் பட்டுராஜா (வயது 49) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி (29) இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஜெயலட்சுமி இரவு 11 மணி அளவில் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனை கவனித்த பட்டுராஜா நள்ளிரவு நேரத்தில் யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டு கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயலட்சுமி இரும்பு கம்பியால் கணவரின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் பட்டுராஜா படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் மீ்ட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இது தொடர்பாக பட்டுராஜா செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயலட்சுமியை கைது செய்தனர். செல்போன் பேசியதை கண்டித்த கணவரை, மனைவி அடித்து படுகாயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






