ஆட்டோ டிரைவருக்கு மண்டை உடைப்பு

முன்விரோத கரணத்தால் விபரீதம்போலீசார் ஜெயிலில் அடைத்தனர்
ஆட்டோ டிரைவருக்கு மண்டை உடைப்பு
Published on

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் ஆசனம்பட்டு ரோடு பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் சங்கர் வயது (32) ஆட்டோ டிரைவர்.

இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஆதீல் அஹமது (33) ஷூ கம்பனி தொழிலாளி என்பவருடன் முன்விரோதம் இருந்தது. நேற்று இரவு சங்கரை வழி மடக்்கி ஆதீல்அஹமது சரமாரியாக தாக்கியதில் சங்கருக்கு மண்டை உடைந்து அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆதீல் அஹமதுவை ஆம்பூர் டவுன் போலீசார் கைது ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com