கீரம்பூர் பகுதியில் மது பாட்டில்கள் விற்ற 3 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அரசு மதுபான கடையின் அருகில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 76 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கீரம்பூர் பகுதியில்  மது பாட்டில்கள் விற்ற 3 பேர் கைது
Published on

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அரசு மதுபான கடையின் அருகில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அங்காளக் கோட்டை பகுதியை சேர்ந்த ரகுபதிராஜா (25), சொக்கநாதபுரம் அருகே போரடப்பு பகுதியை சேர்ந்த அஜித் (25), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கேத்தங்கால் தெற்கு தெருவை சேர்ந்த காளீஸ்வரன் (20) ஆகிய 3 பேர் மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 76 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளைச்சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com