என் மலர்

  நீங்கள் தேடியது "IT department"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அனில் அம்பானி, சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்குகளில் ரூ.420 கோடி வரி ஏய்ப்பு.
  • அனில் அம்பானியிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

  புதுடெல்லி :

  பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி, சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்குகளில் ரூ.814 கோடி அளவுக்கு முதலீடு செய்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

  அவர் வேண்டுமென்றே சுவிஸ் வங்கி முதலீடுகளை மறைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டி, அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

  இது தொடர்பாக அனில் அம்பானியிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனது வீட்டில் எந்த நேரத்திலும் வருமான வரி சோதனை நடைபெறலாம் எனவும், அவர்களை வரவேற்க காத்திருப்பதாகவும் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். #PChidambaram #ITRaids
  சென்னை:

  பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனை நடத்தி, பல கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்துள்ளனர்.  இதேபோல் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளை குறிவைத்து வருமான வரி சோதனை நடப்பதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  இந்நிலையில், முன்னாள் மத்திய நிதி மந்திரி தனது டுவிட்டர் பதிவில், தனது வீட்டில் எந்த நேரத்திலும் வருமான வரி சோதனை நடக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

  “எனக்குக் கிடைத்த தகவல்: என்னுடைய சென்னை மற்றும் மானகிரி வீடுகளில் வருமான வரி இலாகாவின் சோதனை எந்த நேரத்திலும் நடக்கலாம். வருமான வரி அதிகாரிகளை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம். எங்கள் தேர்தல் பணிகளை முடக்கவே இந்த நடவடிக்கை என்பது எல்லோருக்கும்  தெரிந்த செய்திதான். இந்த அரசின் அத்து மீறல்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நாளன்று சரியான பாடம் புகட்டுவார்கள்” என டுவிட் செய்துள்ளார் ப.சிதம்பரம். #PChidambaram #ITRaids
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கையில் மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி சி.பி.ஐ., வருமான வரித்துறையை பயன்படுத்துகிறது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். #Congress #Narayanasamy #BJP
  பெரம்பலூர்:

  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் நடந்த வெள்ளி விழா ஆண்டு தொடக்க விழாவில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  இந்திய நாட்டின் மிகப்பெரிய பலமே மனித வளம். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் சீனாவை நாம் மிஞ்சியுள்ளோம். 30 வயதுக்குறைந்த இளைஞர்கள் நம்முடைய நாட்டில் 60 சதவீதம் பேர் உள்ளனர். இதனால் தான் வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான கோடி ரூபாய் நம்முடைய நாட்டில் முதலீடு செய்யப்படுகிறது. பல நிறுவனங்கள் நம் நாட்டை நோக்கி வருகின்றனர்.

  அதுமட்டுமல்லாமல் நம் நாட்டிலே படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், விஞ்ஞானிகள், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, தென்கொரியா, ஐரோப்பியா போன்ற நாடுகளில் சென்று பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

  மத்திய பாரதிய ஜனதா ஆட்சியில் சாதாரண மக்களுக்கு, நடுத்தர மக்களுக்கும், தொழில் வியாபாரிகளுக்கு, தொழிற்சாலை நிறுவனங்களுக்கு ஒரு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பல வாக்குறுதிகளை கொடுத்த மத்திய அரசு நான்கரை ஆண்டுகள் ஆகியும் முழுமையாக நிறைவேற்றவில்லை. பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி இவைகளெல்லாம் நாட்டில் வேலைவாய்ப்பை குறைத்து பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

  கடந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இந்திய நாட்டில் வளர்ச்சி 9 சதவீதம் இருந்தது. தற்போது 7.1 சதவீதமாக ஆகியுள்ளது. இந்தியாவில் பொருளாதாரம் 2 சதவீதம் குறைந்துள்ளது. பாரதிய ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து துறைகளையும் சரி செய்ய குறைந்த பட்சம் ஓராண்டு ஆகும். விவசாயிகள், தொழில் நிறுவனம், தொழிற்சாலை, தொழிலாளர்கள், சிறுபான்மையினர், அரசு ஊழியர்கள் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க முதல்வரே தெருவில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

  அதற்கு காரணம் வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. அதை தன் கையில் எடுத்துக் கொண்டு அரசியல் எதிரிகளையும், தொழில் அதிபர்களையும் பழிவாங்கும் நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. சி.பி.ஐ. நிறுவன தலைவரே ஊழல் செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு எல்லாமே பலவீனமடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தை உயர்த்த வேண்டுமென்றால் நாட்டில் மாற்றம் வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார். #Congress #Narayanasamy #BJP
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெயலலிதாவுக்கு சட்டப்படியான வாரிசுகள் யாரும் உள்ளனரா? என்பது குறித்து வருமான வரித்துறை தெரிவிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Jayalalithaa #HC
  சென்னை:

  மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1997-1998-ம் ஆண்டு தனக்கு 4.67 கோடி ரூபாய் மதிப்புக்கு அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வருமான வரித்துறையிடம் கணக்கு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் 7.27 லட்சம் ரூபாய் சொத்து வரியாக நிர்ணயித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.

  இந்தநிலையில் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, ஜெயலலிதாவுக்கு ரூ.3.83 கோடி மதிப்புக்கு தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருப்பதாகவும், செல்வ வரி கணக்கை ஜெயலலிதா முறையாக காண்பிக்கவில்லை என்றும் வருமான வரித்துறைக்கு அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மறு மதிப்பீடு செய்து குறிப்பிட்ட தொகையை செல்வ வரியாக செலுத்த ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டனர்.

  இதை எதிர்த்து, ஜெயலலிதா வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், வருமான வரித்துறை அதிகாரிகளின் திருத்திய மதிப்பீட்டை ரத்து செய்தது.  தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், கே.கல்யாணசுந்தரம், ‘ஜெயலலிதாவுக்கு சட்டப்படியான வாரிசுகள் யாரும் உள்ளனரா? அல்லது அவர் தனது சொத்துகள் தொடர்பாக உயில் எதுவும் எழுதி வைத்துள்ளாரா? என்பது குறித்து வருமான வரித்துறை தெரிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

  பின்னர், விசாரணையை 26-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.  #Jayalalithaa #HC
  ×