என் மலர்

  செய்திகள்

  வருமான வரி அதிகாரிகளை வரவேற்க காத்திருக்கிறோம் - ப.சிதம்பரம்
  X

  வருமான வரி அதிகாரிகளை வரவேற்க காத்திருக்கிறோம் - ப.சிதம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனது வீட்டில் எந்த நேரத்திலும் வருமான வரி சோதனை நடைபெறலாம் எனவும், அவர்களை வரவேற்க காத்திருப்பதாகவும் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். #PChidambaram #ITRaids
  சென்னை:

  பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனை நடத்தி, பல கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்துள்ளனர்.  இதேபோல் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளை குறிவைத்து வருமான வரி சோதனை நடப்பதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  இந்நிலையில், முன்னாள் மத்திய நிதி மந்திரி தனது டுவிட்டர் பதிவில், தனது வீட்டில் எந்த நேரத்திலும் வருமான வரி சோதனை நடக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

  “எனக்குக் கிடைத்த தகவல்: என்னுடைய சென்னை மற்றும் மானகிரி வீடுகளில் வருமான வரி இலாகாவின் சோதனை எந்த நேரத்திலும் நடக்கலாம். வருமான வரி அதிகாரிகளை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம். எங்கள் தேர்தல் பணிகளை முடக்கவே இந்த நடவடிக்கை என்பது எல்லோருக்கும்  தெரிந்த செய்திதான். இந்த அரசின் அத்து மீறல்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நாளன்று சரியான பாடம் புகட்டுவார்கள்” என டுவிட் செய்துள்ளார் ப.சிதம்பரம். #PChidambaram #ITRaids
  Next Story
  ×