என் மலர்

  நீங்கள் தேடியது "Swiss Bank"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அனில் அம்பானி, சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்குகளில் ரூ.420 கோடி வரி ஏய்ப்பு.
  • அனில் அம்பானியிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

  புதுடெல்லி :

  பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி, சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்குகளில் ரூ.814 கோடி அளவுக்கு முதலீடு செய்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

  அவர் வேண்டுமென்றே சுவிஸ் வங்கி முதலீடுகளை மறைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டி, அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

  இது தொடர்பாக அனில் அம்பானியிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த ஆண்டு நிலவரப்படி ஒட்டுமொத்தமாக ரூ.30,500 கோடிக்கு மேல் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் உள்ளது.
  • 2020-ம் ஆண்டை ஒப்பிடுகையில் (ரூ.20,700 கோடி) சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அதிகம் ஆகும்.

  சூரிச் :

  சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு தொடர்பான விவரங்களை சுவிட்சர்லாந்து அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு நிலவரப்படி தங்கள் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் வைப்புத்தொகை குறித்து தற்போது தகவல் அளித்து உள்ளது.

  அதன்படி, கடந்த ஆண்டு நிலவரப்படி ஒட்டுமொத்தமாக ரூ.30,500 கோடிக்கு மேல் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் உள்ளது. இது முந்தைய 2020-ம் ஆண்டை ஒப்பிடுகையில் (ரூ.20,700 கோடி) சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அதிகம் ஆகும். அந்தவகையில் ஒரு ஆண்டில் மட்டுமே 50 சதவீத அளவுக்கு இந்தியர்களின் தொகை அதிகரித்து இருக்கிறது.

  மேலும் இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் ஆகும். இதைத்தவிர சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் சேமிப்பு அல்லது டெபாசிட் கணக்குகளில் வைத்திருக்கும் பணமும் 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுமார் ரூ.4,800 கோடியாக உயர்ந்துள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் குமார் ஜாக்கர் தன் மனைவி பெயரில் சுவிட்சர்லாந்து வங்கியில் ரூ.7 கோடியே 37 லட்சம் டெபாசிட் செய்திருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  குர்தாஸ்பூர்:

  பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்தம் 13 தொகுதிகளிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. அவற்றில் ஒன்றான குர்தாஸ்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பல்ராம் ஜாக்கரின் மகன் சுனில் குமார் ஜாக்கர் போட்டியிடுகிறார். அவர் தனது பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.  அதில், தனக்கு ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும், ரூ.1 கோடியே 53 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகளும் இருப்பதாக கூறியுள்ளார். தன் மனைவி சில்வியா பெயரில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில் ரூ.7 கோடியே 37 லட்சம் டெபாசிட் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் மல்லையா தனது லண்டன் வங்கி கணக்கில் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிக்கு ரூ.170 கோடி பண பரிமாற்றம் செய்து இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. #vijayMallya #CBI
  புதுடெல்லி:

  பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்கவில்லை.

  வங்கிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இதுபற்றி வழக்கு தொடர்ந்ததும் விஜய் மல்லையா கடந்த 2015-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.

  மல்லையா செய்த மோசடி பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரை சி.பி.ஐ. திட்டமிட்டு தப்ப விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

  மல்லையாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக்அவுட் நோட்டீசை திருத்தி சி.பி.ஐ. மெத்தனமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இதை சி.பி.ஐ. அதிகாரிகள் மறுத்துள்ளனர்.  இந்த நிலையில் விஜய் மல்லையா தனது லண்டன் வங்கி கணக்கில் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிக்கு ரூ.170 கோடி பண பரிமாற்றம் செய்து இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. இங்கிலாந்து நாட்டு பொருளாதார பிரிவு அதிகாரிகள் மூலம் இந்த தகவல் சி.பி.ஐ.க்கு வந்துள்ளது.

  அதன்பேரில் மல்லையா மீதான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  அதோடு மல்லையாவை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வரும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. #VijayMallya #CBI
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுவிஸ் நே‌ஷனல் பாங்க் வெளியிட்ட தகவலில் இந்தியர்களின் பணம் சுமார் ரூ.300 கோடி கேட்பாரற்று கிடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று இந்தியர்களுக்கு சொந்தமான பணம் அது என்று கூறப்படுகிறது.
  புதுடெல்லி:

  இந்திய கோடீசுவரர்கள் வரி ஏய்ப்பு செய்து சம்பாதிக்கும் கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கிகளில் சேமித்து வைக்கிறார்கள்.

  அந்த வகையில் சுவிஸ் வங்கிகளில் இந்திய பணக்காரர்களுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது.

  அந்த கருப்புப் பணத்தை மீட்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. அதன் பலனாக பணம் முதலீடு செய்து இருப்பவர்களின் பெயர்களை சுவிஸ் வங்கிகள் வெளியிட்டன. ஆனால் அதில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்கவில்லை.

  இந்த நிலையில் சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியர்கள் போட்டுள்ள பணம் 50 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

  சுவிஸ் நே‌ஷனல் பாங்க் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 2017-ம் ஆண்டு இந்திய கோடீசுவரர்கள் ரூ.7 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் மூன்றாவது ஆண்டாக சுவிஸ் நே‌ஷனல் பாங்க் தன்னிடம் கணக்கு வைத்துள்ள உள்ளூர் பகுதி மக்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் பற்றிய விவர பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சில இந்தியர்கள் பெயர்களும் உள்ளன.

  அந்த இந்தியர்களில் 6 பேர், தங்களது கணக்குகளில் உள்ள பணத்தை உரிமை கொண்டாடமல் இருக்கும் தகவலும் வெளியிடப்பட் டுள்ளது. சமீபத்தில் சுவிட்சர்லாந்து அரசாங்கம், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள் முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை தங்கள் நாட்டில் குவிப்பதை தடுக்க சட்டங்களை திருத்தி கடுமையாக்கியது. இதனால் சில இந்தியர்கள் தங்கள் பணத்துக்கு உரிமை கோராமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.


  சுவிஸ் நே‌ஷனல் பாங்க் வெளியிட்ட தகவலில் இந்தியர்களின் பணம் சுமார் ரூ.300 கோடி கேட்பாரற்று கிடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று இந்தியர்களுக்கு சொந்தமான பணம் அது என்று கூறப்படுகிறது.

  அந்த இந்தியர்கள் பற்றிய மற்ற எந்த விபரங்களையும் பெற முடியாத நிலை உள்ளது. எனவே அந்த இந்தியர்களோ அல்லது அவர்களது வாரிசுதாரர்களோ உரிய ஆவணங்கள், சான்றிதழ்களை காண்பித்து ரூ.300 கோடியை திரும்ப பெற்றுச் செல்லலாம் என்று சுவிஸ் நே‌ஷனல் பாங்க் அறிவித்துள்ளது.

  40 கணக்குகள் மூலம் 2 பெரிய பெட்டிகளில் உள்ள அந்த ரூ.300 கோடியை இதுவரை எந்த இந்திய பணக்காரரும் உரிமை கொண்டாடவில்லை. #SwissBank
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப் பணம் அல்ல மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley #SwissBank #BlackMoney
  புதுடெல்லி:

  இந்திய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் அதிகளவில் பணம் பதுக்கல் செய்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கருப்புப்பண விவகாரம் புயலாக வீசிய நிலையில், மோடி பல வாக்குறுதிகளுடன் ஆட்சியை பிடித்தார்.

  பிரதமரானதும் கருப்புப்பணத்தை மீட்கும் நடவடிக்கையாக தனி குழு அமைத்தார். ஆனால், அதன் பின்னர், அந்த வேலையில் எந்த முன்னேற்றமும் நடந்ததாக தெரியவில்லை.

  இதற்கிடையே, சுவிட்சர்லாந்தில் உள்ள நேஷனல் வங்கி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை வெளியிட்டது. கடந்த 2016-ம் ஆண்டை விட இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் என தெரிவித்துள்ளது. அதாவது சுமார் ரூ.7 ஆயிரம் கோடி உயர்ந்துள்ளது.

  மேலும், ரூ.3,200 கோடி இந்திய ரூபாயாக வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளாக செலுத்தப்பட்டுள்ளது. பிற வங்கிகள் மூலமாக சுவிஸ் வங்கிகளில் போடப்பட்ட தொகை ரூ.1,050 கோடி. பங்குகள் உள்ளிட்ட பிற வகைகளில் செலுத்தப்பட்ட தொகை ரூ.2,640 கோடி என சில புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. 

  இந்நிலையில் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

  இதுதொடர்பாக அவர் பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் ஏராளமானோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள். சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப் பணம் பதுக்கி இருந்தால் கண்டறியப்படும். சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என பதிவிட்டுள்ளார். #ArunJaitley #SwissBank #BlackMoney
  ×