ஊரக வளர்ச்சி துறையினர் ஆர்ப்பாட்டம்

தேர்வு நிலை அரசாணையை நிறைவேற்ற வேண்டும்.ஊதிய மாற்ற அரசாணை நிறைவேற்ற வேண்டும்.
ஊரக வளர்ச்சி துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரக வளர்ச்சி துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் தியாகராஜன் மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்.ராஜேந்திரன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகம் ஒப்புக்கொண்ட ஊராட்சி செயலாளர் பணி விதிகள், சிறப்பு நிலை, தேர்வு நிலை அரசாணையை நிறைவேற்ற வேண்டும்,

கணினி உதவியாளர் பணி வரன்முறை மற்றும் ஊதிய மாற்ற அரசாணை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட துணை தலைவர் நடராஜன், சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் கலா, மாவட்ட துணை தலைவர் லதா, சௌந்தரபாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். முடிவில் மாநில பொருப்பாளர் மாரி.தெட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com