தோளூர்பட்டியில் 5,500 பனைமர விதைகளை நடவு

அரசு பள்ளி மாணவர்கள் தோளூர்பட்டியில் 5,500 பனைமர விதைகளை நடவு
தோளூர்பட்டியில் 5,500  பனைமர விதைகளை நடவு
Published on

தொட்டியம்,  

திருச்சி மாவட்டம் தொட்டியம் கொசவம்பட்டியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தோளூர்பட்டியில் 7 நாட்கள் நடைபெறுகிறது.

தொடக்க நிகழ்ச்சியில் முகாமை பள்ளி தலைமை ஆசிரியர் நல்லதம்பி தொடங்கி வைத்தார். உதவிதலைமை ஆசிரியர் பழனியப்பன், பள்ளி முதுகலை ஆசிரியர் சுரேஷ் குமார், தோளூர்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜெயந்தி, ராம்கி, பழனியம்மாள், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 25 பேர் 7 நாட்களில் தோளூர்பட்டி பள்ளி வளாகம் மற்றும் கோவில் வளாகம் உட்பிரகாரம் மற்றும் வாரச்சந்தை அனைத்து இடங்களிலும் சுத்தம் செய்தனர். தோளூர்பட்டி ஏரிக்கரையில், அமிர்தம் குளம், தோளூர்பட்டிக்கு வடக்கில் அமைந்துள்ள குட்டை ஆகிய இடங்களில் 5500- க்கும் மேற்பட்ட பனைமர விதைகளை விதைத்தனர். நிகழச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும் பள்ளி முதுகலை ஆசிரியருமான கேசவமூர்த்தி செய்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com