"பறந்து போ" படத்தின் முதல் பாடலான "சன் ஃபிளவர்" வெளியானது

பறந்து போ படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.பறந்து போ படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
"பறந்து போ" படத்தின் முதல் பாடலான "சன் ஃபிளவர்" வெளியானது
Published on

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், பறந்து போ படத்தில் இடம்பெற்றுள்ள சன் ஃபிளவர் என்கிற பாடல் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் மே 23ம் தேதி சன் பிளவர் என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com