search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mourning"

    • பழனிசாமி தஞ்சையில் நடந்த தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார்.

    திருவாரூர்:

    தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் அருகே செம்மங்குடி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது65).

    தச்சு தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தஞ்சையில் நடந்த தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    பின்னர் வலங்கைமான் வழியே தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் கடைவீதியில் சென்ற போது மோட்டார்சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார். விபத்தில் பலியான பழனிசாமிக்கு சுசிலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    • துக்க வீட்டில் தகராறு; 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் சேதுபதி தெருவை சேர்ந்தவர் முனியசாமி (வயது 38). இவரது சகோதரர் மணிகண்டன்(35). இவர்களுக்கும் உறவினர் சுப்பிரமணி(58) என்பவ ருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று வில்லாபுரத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு முனிய சாமி, மணிகண்டன் சென்றிருந்தனர். அப்போது அங்கிருந்த சுப்பிர மணிக்கும், இவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இரு தரப்பினரும் ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் சுப்பிர மணி, முனியசாமி, மணி கண்டன் ஆகிய 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    லாஸ்பேட்டையில் கணவர் இறந்த துக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை சாமிபிள்ளைதோட்டம் அணைக்கரை வீதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பிரனாம்பாள் (வயது50). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதற்கிடையே ராஜா கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்.

    பாசத்துடன் இருந்து வந்த கணவர் திடீரென இறந்ததால் பிரனாம்பாள் சோகத்தில் மூழ்கினார். கணவர் இறந்தது முதல் அவர் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். மகன்கள் நன்றாக கவனித்து வந்தாலும் கணவரின் இறப்பை பிரனாம்பாவால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் மனமுடைந்த பிரனாம்பாள் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர்உசேன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சட்டசபை இன்று தொடங்கியதும் அரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ராஜமாணிக்கம், கும்பகோணம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கி.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. #TNAssembly
    சென்னை:

    சட்டசபை இன்று தொடங்கியதும் அரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ராஜமாணிக்கம், கும்பகோணம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கி.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    சபாநாயகர் தனபால் இரங்கல் குறிப்பு வாசித்தார். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சிறிது நேரம் எழுந்து நின்று மவுனஅஞ்சலி செலுத்தினார்கள். #TNAssembly
    நிலக்கோட்டை அருகே துக்க வீட்டுக்கு வந்தவர் மாரடைப்பால் இறந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள முத்துகாமன் பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ஆனந்தகிருஷ்ணன் (வயது 22). இவர் சம்பவத்தன்று துரைசாமிபுரம் பிரிவு அருகே சென்று கொண்டு இருந்த போது கார் மோதி தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் வந்த பஸ் அவர் தலையில் ஏறி நசுக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதனால் அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு டாஸ்மாக் கடையை அகற்றுமாறு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    ஆனந்தகிருஷ்ணன் உடல் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மல்லையாபுரத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் ராமசாமி (29) வந்தார். அவர் ஆனந்தகிருஷ்ணன் உடலை பார்த்து கதறி அழுது கொண்டு இருந்தபோதே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் மேலும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் மகள் இறந்ததால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்டார்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜு (வயது 70), விவசாயி. இவருக்கு தமிழரசி என்ற மகள் இருந்தார். அவர் கடந்த வருடம் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த ராஜு, உறவினர்களிடம் இது குறித்து கூறி வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மகள் பற்றி பேசிக் கொண்டிருந்த ராஜு திடீரென வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார். இதனால் உறவினர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜு பரிதாபமாக நேற்று மாலை உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி மாயஜோதி (55) அளித்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்தார். மேலும் ராஜுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை அருகே தாய் இறந்த துக்கத்தில் மிகுந்த மனவேதனை அடைந்த வாலிபர் சாணிப்பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை மதுக்கரை அருகே உள்ள தம்பாகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் அசோக்குமார் (வயது 21). இவரது தாய் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தார். 

    தாய் இறந்ததால் அசோக்குமார் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அசோக்குமாரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அசோக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மத்திய மந்திரி அனந்த குமார் உடலுக்கு பெங்களூரில் உள்ள பாஜக தலைமையகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர். #AnanthKumar #RIPAnanthKumar #KarnatakaBJP
    பெங்களூரு:

    மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் நேற்று காலமானார். அவரது உடல் பசவனகுடியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அனந்த குமார் உடல் முப்படை விரர்கள் புடைசூழ மல்லேஸ்வரத்தில் உள்ள மாநில பாஜக தலைமையகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    அங்கு அவரது உடலுக்கு மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, கர்நாடக மாநிலத்துக்கான பொதுச்செயலாளர் முரளிதர் ராவ், மத்திய மந்திரி சதானந்த கவுடா, அசோகா, ஈஸ்வரப்பா, அனுராக் தாகூர் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனந்த குமாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.


    இதையடுத்து தேசிய கல்லூரி மைதானத்திற்கு அனந்த குமார் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு, அரசு முழு மரியாதையுடன் சாமராஜபேட்டில் அவரது உடல் தகனம் செய்யப்படும்.

    வாரணாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மோடி, நேற்று இரவு அங்கிருந்து நேராக பெங்களூரு வந்து அனந்த குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.  #AnanthKumar #RIPAnanthKumar #KarnatakaBJP
    மத்திய மந்திரி அனந்த குமார் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. #AnanthKumar #RIPAnanthKumar
    பெங்களூரு:

    பெங்களூருவில் உள்ள தனியார்  மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த மத்திய ரசாயனம் மற்றும் உரம், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் (வயது 59) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். அனந்தகுமாரின் உடல், குடும்பத்தினர் அஞ்சலிக்காக லால்பக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி அனந்த குமார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அனந்த குமார் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    அனந்த குமார் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அவருக்கு அரசு முழு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    அனந்த குமாருக்கு அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, தேசிய கல்லூரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. #AnanthKumar #RIPAnanthKumar
    கலைஞர் கருணாநிதியின் நண்பர் மரணமடைந்ததையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தனிச்சிறப்பு வாய்ந்த தமிழறிஞரும், மொழிப் போராட்ட வீரருமான புலவர் கீ.த.பச்சையப்பன் தனது 84-வது வயதில் மறைவடைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன்.

    அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் தி.மு.க.வின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தலைவர் கலைஞரின் இளமைக்காலம் தொட்டே உற்ற நண்பராக விளங்கியவரும், புகழ் பெற்ற தனித்துவம் வாய்ந்த பாரி நாதசுரம் இசைப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவரும், திருவாரூர் தென்னனின் சகோதரரும், அரிய கலைஞருமான திருவாரூர் செல்வகணபதி தனது 94-ம் வயதில் மறைவுற்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  #MKStalin

    மனைவி இறந்த துக்கம் தாங்காமல் பேசாமல் இருந்த வந்த வாலிபர் விஷம் குறித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 42), தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து 11 வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி இறந்து விட்டார். இதனால் கிருஷ்ணகுமார் யாருடனும் பேசாமல் காணப்பட்டு வந்தார். இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த அவர், சம்பவத்தன்று விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். 

    இதையடுத்து அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கிருஷ்ணகுமார் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து நேசமணி நகர் போலீசில் புகார் செய்யப் பட்டது. இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் புதுக்கடையை அடுத்த காப்பிக்காடு குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 48), தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இல்லை. இதனால் மனவருத்தத்துடன் காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்- இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய மற்றும் நகர தி.மு.க சார்பாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வகோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்  கந்தர்வகோட்டை தெற்கு  ஒன்றிய மற்றும் நகர தி.மு.க சார்பாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் மற்றும் புகழஞ்சலி ஒன்றிய அவை தலைவர்  குஞ்சப்பா தலைமையில் நடைபெற்றது. 

    கூட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் தீர்மானத்தை வாசித்தார். உருவப்படத்திற்கு மாலை தூவி மரியாதை செய்து புகழஞ்சலி வாசித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ராஜேந்திரன், ராமசாமி, சவுந்தர்ராஜன்,   இளங்கோவன், மாவட்ட பிரதிநிதிகள் அர்சுணன், மதியழகன், நகரச்  செயலாளர் ராஜா, நகர  இளைஞரணி அமைப்பாளர்   கலையரசன், முன்னாள்  மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதையும், தலைவருக்கு புகழஞ்சலியும் செய்தனர்.
    ×