

திருவாரூர்:
தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் அருகே செம்மங்குடி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது65).
தச்சு தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தஞ்சையில் நடந்த தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பின்னர் வலங்கைமான் வழியே தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் கடைவீதியில் சென்ற போது மோட்டார்சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார். விபத்தில் பலியான பழனிசாமிக்கு சுசிலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.