துக்க வீட்டில் தகராறு; 3 பேருக்கு கத்திக்குத்து

துக்க வீட்டில் தகராறு; 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துக்க வீட்டில் தகராறு; 3 பேருக்கு கத்திக்குத்து
Published on

மதுரை

மதுரை ஜெய்ஹிந்துபுரம் சேதுபதி தெருவை சேர்ந்தவர் முனியசாமி (வயது 38). இவரது சகோதரர் மணிகண்டன்(35). இவர்களுக்கும் உறவினர் சுப்பிரமணி(58) என்பவ ருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று வில்லாபுரத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு முனிய சாமி, மணிகண்டன் சென்றிருந்தனர். அப்போது அங்கிருந்த சுப்பிர மணிக்கும், இவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் சுப்பிர மணி, முனியசாமி, மணி கண்டன் ஆகிய 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com