என் மலர்
நீங்கள் தேடியது "தந்தை மகள்"
- தனது மகளை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு தான் திறமையானவர் என்பதால், எந்த உதவியும் தேவையில்லை என்று அவர் கூறினார்.
- எத்தனை பேர் மௌனப் போராட்டங்களை புன்னகையுடன் சுமக்கிறார்கள் என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம்.
உலகத்திலேயே மிகவும் கஷ்டப்படுவது நாம் தான்.. நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது... என்று பலரும் நொந்துக்கொள்கின்றனர். ஆனால் நம்மை விட வறுமையிலும், ஆதரவு இல்லாமலும் பல பேர் இவ்வுலகில் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். அவர்களை பார்க்கும் போது நம்முடைய வலிகளும், வேதனைகளும் சிறியதாக தெரியும். அப்படி ஒரு சம்பவம் தான் இணையதள வாசிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
குருகிராமைச் சேர்ந்த மயங்க் என்பவர் ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர் உடனான உரையாடல் குறித்து லின்க்டுஇன் தளத்தில் பகிர்ந்து இருந்தார். அதில், ஸ்விக்கி டெலிவரி பார்ட்னரான பங்கஜ் என்பவர் உணவை டெலிவரி செய்யும் போது அவரது இரண்டு வயது மகளை அழைத்துக்கொண்டு வந்து ஆர்டரை வழங்கினார். அவரிடம் ஏன் குழந்தையுடன் வந்து ஆர்டரை வழங்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், மனைவி பிரசவத்தின் போது இறந்துவிட்டதாலும், மூத்த மகன் வகுப்புக்கு சென்று இருப்பதாலும், மகளை தான் மட்டுமே பார்த்துக்கொள்ளவதாக கூறினார். இதனால் மகளை தன்னுடன் அழைத்து வருவதை விட வேறு வழியில்லை என்றும் கூறியதாக பதிவிட்டு இருந்தார்.
பங்கஜின் கதை இணையத்தில் புயலைக் கிளப்பியது. பலர் அவரது விடாமுயற்சி மற்றும் உழைப்பை பாராட்டினர். அதே நேரத்தில் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் ஆதரவளிக்க முன்வந்தனர். பயனர்கள் அவரது தொடர்பு எண்ணைக் கேட்டு கருத்துகளைப் பதிவு செய்தனர். சிலர் அவருக்கு உதவ ஸ்விக்கியையும் அழைத்தனர். மேலும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு செயல்பாட்டுக் குழு உறுப்பினர் அவ்வாறு செய்ய ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
பங்கஜின் UPI ஐடியைப் பகிர்ந்து கொண்ட மயங்க், பின்னர் அதை நீக்கிவிட்டு, திருத்திய பதிவை பகிர்ந்தார். அதில், "அவருக்கு இப்போது எந்த நிதி உதவியும் தேவையில்லை. அவருக்கு நிறைய அழைப்புகள் வருவதாகவும், வேலை செய்ய முடியவில்லை என்று பங்கஜ் கூறினார். நண்பர்களே, தயவுசெய்து அவரை அழைக்க வேண்டாம். தனது மகளை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு தான் திறமையானவர் என்பதால், எந்த உதவியும் தேவையில்லை என்று அவர் கூறினார். உதவி உண்மையில் தேவைப்படும் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று பங்ஜ் கூறினார். தனது வீட்டில் மகள் வடிவில் "லட்சுமி" இருப்பதாக பங்கஜ் மகிழ்ச்சியுடன் தெரிவித்ததாக மயங்க் கூறியுள்ளார்.
இந்த பதிவை கண்ட பயனர்களோ, இது என் இதயத்தைத் தொட்டது. ஒரு தந்தையாக பங்கஜின் பலமும் அன்பும் ஊக்கமளிப்பதை விட அதிகம். எத்தனை பேர் மௌனப் போராட்டங்களை புன்னகையுடன் சுமக்கிறார்கள் என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம் என்றும் இந்த மனிதருக்கும் அவரது மகளுக்கும் இருக்கும் வைராக்கியம், மன உறுதி மற்றும் தைரியத்தைக் கண்டு நான் வியப்படைகிறேன். கடவுள் அவர்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் அருளட்டும். ஏதாவது உதவி தேவைப்பட்டால் தெரியப்படுத்துங்கள் என்று பதிவிட்டு பங்கஜை பாராட்டி வருகின்றனர்.
பங்கஜின் கதை, நாம் பெரும்பாலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சேவைகளுக்குப் பின்னால் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத போராட்டங்களின் அப்பட்டமான பிரதிபலிப்பாகும். இது குறிப்பாக ஒற்றைப் பெற்றோரின் போராட்டங்களையும், சமூகத்திலிருந்து முழுமையான பச்சாதாபமின்மையையும், மலிவு மற்றும் நம்பகமான ஆதரவு அமைப்பு இல்லாததையும் காட்டுகிறது.
உணவு டெலிவரி பார்ட்னர்கள் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், பங்கஜ் போன்ற டெலிவரி பார்ட்னர்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
- கனடாவில் வேலை பார்த்து வரும் இந்தியாவை சேர்ந்த ஸ்ருத்வா தேசாய் என்ற மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.
- வீடியோ 10.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், சுமார் 2 லட்சம் விருப்பங்களையும் குவித்துள்ளது.
தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான பாசப்பிணைப்பு தனித்துவமானது அதை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கனடாவில் வேலை பார்த்து வரும் இந்தியாவை சேர்ந்த ஸ்ருத்வா தேசாய் என்ற மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். மகளை ஆச்சர்யப்படுத்துவதற்காக ஸ்ருத்வா தேசாயின் தந்தை இந்தியாவில் இருந்து கனடா வரை பயணம் செய்துள்ளார். ஸ்ருத்வா தேசாய் வேலை பார்க்கும் கடைக்கு திடீரென அவரது தந்தை சென்றதும் ஆச்சரியத்தின் உச்சிக்கு சென்ற ஸ்ருத்வா தேசாய் தனது தந்தையை கட்டிப்பிடித்துக் கொண்டு உணர்ச்சிவசப்பட்ட காட்சிகளும், அவர் ஆனந்த கண்ணீரில் மூழ்கிய காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றிருந்தன.
இந்த வீடியோ 10.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், சுமார் 2 லட்சம் விருப்பங்களையும் குவித்துள்ளது. இதை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் இந்த காட்சி கண்களை ஈரமாக்குகிறது. எந்த தந்தையும் தன் மகளை விட்டு பிரிந்துவிடக்கூடாது என்று ஆசைப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர் இந்த வீடியோ மிகவும் தூய்மையானது எனவும் பதிவிட்டுள்ளார்.
- நீதிபதிகள் ராஜன் ராய் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
- விதவையான பிறகு தனது தந்தை மற்றும் தனது மைனர் மகனுடன் வாழ்ந்து வந்ததார்
கணவனை இழந்து விதவையான பெண்கள் தங்களின் தந்தை மறைவுக்குப் பின்னர் அவரது வேலைக்கு உரிமை கோரலாம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
'பிஎஸ்என்எல் டெலிகாம் அலுவலகத்தில் பொது மேலாளராக வேலை பார்த்த தனது தந்தை உயிரிழந்ததால் அவரது வேலையைப் பெற மகளான எனக்கு தகுதி இல்லை என கூறுகின்றனர், நான் விதவை என்பதால் அந்த வேலையைக் கருணை அடிப்படையில் எனக்கு வழங்க ஆவன செய்யவேண்டும் என்று பெண் ஒருவர் அளித்த மனு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜன் ராய் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய லக்னோ அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விதவையான பிறகு தனது தந்தை மற்றும் தனது மைனர் மகனுடன் தான் வாழ்ந்து வந்ததாகவும், அந்தப் பதவியில் தன்னை நியமிப்பதன் மூலம் தனது குடும்ப உறுப்பினர்களை தன்னால் இயன்றவரைக் கவனித்துக் கொள்ள முடியும் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதைப் பரிசீலித்த நீதிபதிகள், ஒரு பெண் திருமணமான ஆன பிறகும், விதவையான பிறகும் கூட மகள் என்ற தகுதியில் அடங்குவார். குறிப்பாகத் தந்தை இறப்பதற்கு முன்பே விதவையான மகள் சட்டப்படி தனது தந்தையின் பலன்களை ஏற்க அனைத்து தகுதியும் உடையவர் என்று தெரிவித்து அவருக்கு தந்தையின் பதவியைக் கருணை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.






