திடீர் கனடா விசிட்- மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தந்தை

கனடாவில் வேலை பார்த்து வரும் இந்தியாவை சேர்ந்த ஸ்ருத்வா தேசாய் என்ற மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். வீடியோ 10.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், சுமார் 2 லட்சம் விருப்பங்களையும் குவித்துள்ளது.
திடீர் கனடா விசிட்- மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தந்தை
Published on

தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான பாசப்பிணைப்பு தனித்துவமானது அதை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கனடாவில் வேலை பார்த்து வரும் இந்தியாவை சேர்ந்த ஸ்ருத்வா தேசாய் என்ற மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். மகளை ஆச்சர்யப்படுத்துவதற்காக ஸ்ருத்வா தேசாயின் தந்தை இந்தியாவில் இருந்து கனடா வரை பயணம் செய்துள்ளார். ஸ்ருத்வா தேசாய் வேலை பார்க்கும் கடைக்கு திடீரென அவரது தந்தை சென்றதும் ஆச்சரியத்தின் உச்சிக்கு சென்ற ஸ்ருத்வா தேசாய் தனது தந்தையை கட்டிப்பிடித்துக் கொண்டு உணர்ச்சிவசப்பட்ட காட்சிகளும், அவர் ஆனந்த கண்ணீரில் மூழ்கிய காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றிருந்தன.

இந்த வீடியோ 10.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், சுமார் 2 லட்சம் விருப்பங்களையும் குவித்துள்ளது. இதை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் இந்த காட்சி கண்களை ஈரமாக்குகிறது. எந்த தந்தையும் தன் மகளை விட்டு பிரிந்துவிடக்கூடாது என்று ஆசைப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர் இந்த வீடியோ மிகவும் தூய்மையானது எனவும் பதிவிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com