பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் ஆசையில் பெற்ற மகளை கொலை செய்த தந்தை

மகாராஷ்டிரா பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.கணேஷ் அளித்த ஆலோசனையின்படி, தனது மூன்றாவது மகளான பிராச்சியை கொலை செய்ய பாண்டுரங் முடிவு செய்தார்
பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் ஆசையில் பெற்ற மகளை கொலை செய்த தந்தை
Published on

மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டம் கேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங் (28).

முடிதிருத்தும் நிலையம் வைத்து நடத்தி வரும் இவருக்கு இவருக்கு ஒரு மகன் மற்றும் 6 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் பாண்டுரங் போட்டியிட விரும்பினார்.

ஆனால், மகாராஷ்டிரா பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.

இதை அறிந்த பாண்டுரங், தனது நண்பரும் தற்போதைய கிராம பஞ்சாயத்துத் தலைவருமான கணேஷ் ஷிண்டே என்பவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

கணேஷ் அளித்த ஆலோசனையின்படி, தனது மூன்றாவது மகளான பிராச்சியை கொலை செய்ய பாண்டுரங் முடிவு செய்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மகள் பிராச்சியை பைக்கில் அழைத்துக்கொண்டு தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்திற்கு பாண்டுரங் சென்றுள்ளார். அங்குள்ள நிஜாம்சாகர் கால்வாயில் மகளை தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.

கால்வாயில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, நிஜாமாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் அடையாளத்தை அறிந்து, மகாராஷ்டிரா சென்று குடும்பத்தினரிடம் விசாரித்துள்ளனர். 

விசாரணையில் பாண்டுரங் உண்மையை ஒப்புக்கொண்டார்.  பாண்டுரங் மற்றும் சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த கணேஷ் ஷிண்டே ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அரசியல் பதவிக்காகக் பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.  

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com