என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![மகளிடம் பாலியல் தொந்தரவு செய்த தந்தைக்கு வாழ்நாள் சிறை - திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு மகளிடம் பாலியல் தொந்தரவு செய்த தந்தைக்கு வாழ்நாள் சிறை - திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/03/25/1854867-untitled-1.webp)
கோப்புபடம்.
மகளிடம் பாலியல் தொந்தரவு செய்த தந்தைக்கு வாழ்நாள் சிறை - திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 12 வயது மகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
- சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் :
உடுமலை பொன்னேரியை சேர்ந்த 59 வயது கூலித் தொழிலாளி தனது 12 வயது மகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.கடந்த 2-12-2019 அன்று வீட்டில் இருந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார். மேலும் தொடர்ச்சியாக தனது மகளை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார். உடனடியாக உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
மகளை பாலியல் கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையும்,ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராத தொகையை சிறுமியின் படிப்புக்கு வழங்கவும், மேலும் சிறுமியின் மறுவாழ்வுக்காக அரசு ரூ.2.50 லட்சம் வழங்கவும் நீதிபதி பாலு உத்தரவிட்டார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)