search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "காயத்ரி ரகுராம்"

  • எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக-வில் இணைத்துக் கொண்டார்.
  • நன்றியை மறக்கக்கூடாது என்பதற்காக அதிமுக-வில் இணைந்துள்ளேன் என தெரிவித்தார்.

  பிரபல நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக-வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், தமிழக பாஜக-வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டிய அவர், பாஜக-விற்கு எதிரான கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்.

  இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து அதிமுக-வில் இணைத்துக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, என் குடும்பத்தினர் எப்போதும் அதிமுக-வினர் தான், நன்றியை மறக்க கூடாது என்பதற்காக அதிமுக-வில் இணைந்துள்ளேன் எனக் கூறினார்.

  பாஜக உடனான கூட்டணில் இருந்து அதிமுக விலகிய பிறகு, பாஜக-வை சேர்ந்த பலரும் அதிமுக-வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது பாஜக-வில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், இன்று அதிமுக-வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் காங்கிரசுக்கு 1,380 ரூபாய் நன்கொடை செலுத்தினார்.
  • பிஜேபியை விரும்பாதவர்கள் மற்றும் பங்கேற்க விரும்புபவர்கள் நன்கொடை அளியுங்கள் என தெரிவித்துள்ளார்.

  புதுடெல்லி:

  காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளாரான கேசி வேணுகோபால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி தொடங்கி 138 ஆண்டுகள் ஆனதை நினைவு கூரும் விதமாக தேசத்துக்காக நன்கொடை தாருங்கள் என்ற திட்டம் நாளை மறுதினம் தொடங்கப் போவதாக தெரிவித்தார். இதில் 138, 1380, 13800 என தங்களால் முடிந்த நிதியை மக்கள் அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

  இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், 1380 ரூபாய் நன்கொடை செலுத்தி, அதற்கான ரசீதையும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

  மேலும் அதில், எங்களுக்கு புதிய தலைமுறை வேண்டும், ஆட்சி மாற்றம் வேண்டும், நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்த ஒரு குடும்பத்தை சுயநலத்திற்காக இழிவுபடுத்தும் பா.ஜ.க நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு போலி சாமியார் வேஷம் வேண்டாம். வன்முறை, வெறுப்பு, பாலியல் துன்புறுத்தல், மோசடி, ஜனநாயகத்தை அபகரித்தல், இந்து மதத்தின் பெயரால் அரசியல் ஆகியவற்றை நாங்கள் விரும்பவில்லை. சுதந்திர போராட்ட வீரர்களான காங்கிரஸ் தலைவர்கள் மீது பா.ஜ.க. சவாரி செய்கிறது. சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்டத்தை இழிவுபடுத்தும் பா.ஜ.க.வின் பொய்களை நாங்கள் விரும்பவில்லை. பாதுகாப்பில் தோல்வியடைந்த பா.ஜ.க. பிஜேபியை விரும்பாதவர்கள் மற்றும் பங்கேற்க விரும்புபவர்கள் நன்கொடை அளியுங்கள்- http://donateinc.in என பதிவிட்டுள்ளார்.

  • அண்ணாமலையால் ஒரு இஞ்ச் கூட பா.ஜனதா வளரவில்லை என்பது தான் உண்மை.
  • எடப்பாடி பழனிசாமி திறமையான அரசியல்வாதி. அவரது தலைமையில் அ.தி.மு.க. நிச்சயம் வளரும்.

  பா.ஜனதாவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் அரசியல் பக்கம் தலைகாட்டாமல் இருக்கிறார். இருந்தாலும் அண்ணாமலையை அவ்வப்போது வெளுத்து வாங்குகிறார். இது தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இடைவெளிதான். நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். பெண்களுக்கு எந்த கட்சியில் மரியாதை இருக்கிறதோ அந்த கட்சியில் இணைந்து செயல்படுவேன் என்றார். அவர் மேலும் கூறியதாவது:-

  தமிழ்நாட்டில் மோடியின் பெயரால் பா.ஜனதா சற்று வளர்ந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அண்ணாமலையால் ஒரு இஞ்ச் கூட பா.ஜனதா வளரவில்லை என்பது தான் உண்மை.

  எடப்பாடி பழனிசாமி திறமையான அரசியல்வாதி. அவரது தலைமையில் அ.தி.மு.க. நிச்சயம் வளரும். கடந்த தேர்தலில் 2½ சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் அ.தி.மு.க. தோற்றது. இப்போது பா.ஜனதாவிடம் இருந்து வெளியேறியது அந்த கட்சிக்கு கூடுதல் ஆதாயத்தை தான் கொடுக்கும் என்றார்.

  • 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
  • இப்படம் குறித்து திரைபிரபலங்கள் பலரும் அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  காயத்ரி ரகுராம்நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

  காயத்ரி ரகுராம் - சூர்யா

  காயத்ரி ரகுராம் - சூர்யா

  இப்படம் குறித்து சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறி சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். பல திரைபிரபலங்களும் படம் குறித்து வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ராக்கெட்ரி படத்தை பார்த்த காயத்ரி ரகுராம் தனது சமுக வலைத்தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ராக்கெட்டரி படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.. அதேபோன்று மற்ற மொழிகளிலும் அதே வேடத்தில் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். மற்ற மொழியில் டைலாக்கின் முடிவில் அனைவரும் ஜெய் ஹிந்த் என்று கூறுகிறார்கள். சூர்யா மட்டும் ஜெய்ஹிந்த் சொல்ல மறுத்தது ஏன்? அவர் இந்தியர் இல்லையா? இந்தியா வாழ்க என்று சொல்வதில் பெருமையாக இல்லையா? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இவரின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பல விவாதங்களை கிளப்பி உள்ளது. 


  ×