search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode bypoll"

    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அங்கு தேர்தல் திருவிழா களைகட்டியது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

    இந்நிலையில், தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடித்திட ஒரு பொது பார்வையாளர், ஒரு காவல் பார்வையாளர் என 2 தேர்தல் பார்வையாளர்களை இந்திய தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.

    பொது பார்வையாளராக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் வரும் 7-ம் தேதி முதல் மார்ச் மாதம் 2-ம் தேதி வரை அங்கு பணியில் இருப்பார்.

    காவல் பார்வையாளராக ஆந்திராவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி சுரேஷ்குமார் சாதிவ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் வரும் 7-ம் தேதி முதல் தேர்தல் நடைபெறும் நாளான 27-ம் தேதி வரை தேர்தல் காவல்பணியில் இருப்பார்.

    இதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் ஜெயராமன் அருணாசல பிரதேச இடைத்தேர்தலுக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரி இ.ரவீந்திரன் மேற்குவங்காள இடைத்தேர்தலுக்கும் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.

    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காயத்ரி ரகுராமை அக்கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கினார்.
    • ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என அண்ணாமலைக்கு சவால் விட்டுள்ளார்.

    சென்னை:

    ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன். நான் உங்களை எதிர்த்து நிற்பேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம் என பதிவிட்டுள்ளார்.

    ×