என் மலர்
நீங்கள் தேடியது "நடிகை காயத்ரி ரகுராம்"
- நடிகர்கள் மட்டும் போதை பொருளை பயன்படுத்துவதில்லை.
- சாமானிய மக்கள் கூட போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடிய நிலைக்கு தமிழ்நாடு வந்துள்ளது.
மதுரையில் அ.தி.மு.க. மாநில மகளிரணி துணைச் செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம் நிருபர்களிடம் கூறி யதாவது:-
போதைப்பொருள் இவ்வளவு சுதந்திரமாக கிடைக்க காரணம் தி.மு.க. ஆட்சி தான். தி.மு.க.வி.ல் இருப்பவர்களே போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர். காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. போதைப் பொருள் புழக்கத்தால் பாலியல், கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளது.
நடிகர்கள் மட்டும் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்று இல்லை. மாணவர்கள் மத்தியிலும் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. தி.மு.க.விலிருந்து, அ.தி.மு.க.விற்கு ஆட்களை அனுப்பி கெட்ட பெயர் வாங்க வைக்க வேண்டும் என செயல்படுகிறார்கள்.
தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகள் அதிகமாக உள்ள நிலையில் நடிகர்கள் விவகாரத்தை வைத்து திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். முதலமைச்சர் மட்டும் தான் தன்னை ஒரு மாடல் என சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர அவர் தமிழகத்தை ஒரு மாடல் ஆக்கியதாக தெரியவில்லை.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் தி.மு.க. நிறுத்தி விட்டது. 2026-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் நலத் திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்ப டும். நடிகர்கள் மட்டும் போதை பொருளை பயன்படுத்துவதில்லை, சாமானிய மக்கள் கூட போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடிய நிலைக்கு தமிழ்நாடு வந்துள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகளை மையப்படுத்தி எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார். தி.மு.க. மக்கள் பிரச்சினைகளை பேசுவதில்லை, தி.மு.க. மக்களின் பிரச்சினைகளை திசை திருப்பும் வேலைகளில் எல்லாம் ஈடுபட்டு வருகிறது.
பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாவதற்கு மிக முக்கிய காரணமாக டாஸ்மாக் உள்ளது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த முடியாது. மதுவிலக்கு அமல்படுத்தினால் கள்ளச்சாராய புழக்கம் அதிகரிக்கும். ஆனால் மது விற்பனையை கட்டுக்குள் கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்..






