என் மலர்
நீங்கள் தேடியது "ED Case"
- கடந்த 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
- விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டு ஸ்ரீகாந்த் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.
சென்னை:
போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமீனில் உள்ள அவர்கள் இருவர் மீதும் முறைகேடான பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
அவர்களை கடந்த 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டு நடிகர் ஸ்ரீகாந்த் சார்பில் அமலாக்கத் துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் நடிகர் கிருஷ்ணா அமலாக்கத் துறையின் சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரத்துக்கு மேல் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நவம்பர் 11ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் ஸ்ரீகாந்துக்கு 2-வது முறையாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த சம்மனை ஏற்று நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
- ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரித்தது.
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என கோணத்தில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரித்தது.
இந்நிலையில், சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய வழக்கில் சுரேஷ் ரெய்னாவின் ரூ.6.64 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும், ஷிகர் தவானின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
- ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
- எந்தத் தவறும் செய்யவில்லை என அந்த துறையின் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2,538 பணியாளர்கள் நியமன ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.
அரசு வேலை பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகாரில், எந்தத் தவறும் செய்யவில்லை என அந்த துறையின் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
- தி.மு.க.வில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டும் வேலையை யாரும் செய்யவில்லை.
- அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
திருச்சி:
திருச்சி மத்திய வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்தபின் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் பொழுது சில ஆவணங்கள் கிடைத்ததாகவும், அது குறித்து ஆய்வு செய்யுமாறு அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழக போலீசார் அந்த ஆவணங்களை ஆய்வு செய்வார்கள்.
முறைகேடு நடந்ததா? என்பதை போலீசார் விசாரிப்பார்கள். ஆனால் நான் எந்தவித தவறும் செய்யவில்லை. விசாரணையில் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்து காட்டுவோம்.
தி.மு.க.வை மிரட்டி பார்ப்பதற்காக கூட இதுபோன்று அவர்கள் செய்யலாம். தி.மு.க.வில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டும் வேலையை யாரும் செய்யவில்லை.
தேர்தல் நேரத்தில் எங்களை விமர்சிக்க எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வளவுதான். எங்கள் கூட்டணியில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை தி.மு.க.வின் பி.டீம் எனக் கூறும் எடப்பாடி பழனிசாமி அவர் வாயில் வந்ததை பேசிக்கொண்டு உள்ளார்.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நேர்மையாக நடந்தால் சரியாக இருக்கும். ஆனால் வேண்டுமென்றே பல வாக்காளர்களை கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், நீக்குவதையும் தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.
- அழகு சாதனம் பொருட்கள் விற்பனை செய்யும் இணைய தளம் சொந்தமானது எனத் தெரிவித்துள்ளார்.
- சரியான விவரங்கள் அளிக்கப்படவில்லை. மோசடி வழக்கில் உள்ள மற்றொருவருடன் தொடர்புகள் இருந்தது கண்டுபிடிப்பு.
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை, சந்தீபா விர்க் என்ற இன்ஸ்டா பிரபலத்தை கைது செய்துள்ளனர். 12 லட்சம் பின்தொடர்பவர்களை (Followers) வைத்திருக்கும் சந்தீபா விர்க் 40 கோடி ரூபாய் அளவில் பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டின்படி மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் மொகாலியில் உள்ள காவல்நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டள்ளது. சந்தீபா விர்க் மோசடி வழியில் அசையா சொத்துகளை வாங்கியதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை அமலாக்கத்துறை டெல்லி மற்றும் மும்பையில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பணமோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடத்தியது, அப்போது இவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
FDA அங்கீகாரம் பெற்ற அழக சாதன பொருட்களை விற்பனை செய்வதாக கூறும் hyboocare.com இணைய தளம் தனக்கு சொந்தமானது எனக் கூறிக்கொண்டு வந்துள்ளார். எனினும், அதில் தெரிவிக்கப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இணைய தளம் பயனாளர்களுக்கு குறைபாடு உள்ளதாகவும், பணம் செலுத்தும் கேட்-வே அடிக்கடி பிரச்சினையை மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் தொடர்பு எண் செயல்பாட்டில் இல்லை. நிறுவனம் குறித்து வெளிப்படைத்தன்மையான விவரங்கள் இல்லாமல் இருந்துள்ளது. நிதி மோசடி செய்வதற்காக உண்மையில்லாத வணிக செயல்பாட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதுபோக, தற்போது செயல்படாத ரிலையன்ஸ் கேப்பிட்டல் லிமிடெட் நிறுவுனத்தின் முன்னாள் டைரக்டர் அங்காரை நடராஜன் சேதுராமனுடன் தொடர்புகள் இருந்ததாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேதராமனின் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது, தனிப்பட்ட ஆதாயத்திற்கான நிதியை மாற்றியது, சட்டவிரோத வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அங்காரை நடராஜன் சேதுராமன் 40 கோடி ரூபாயை தனிநபர் ஆதாயத்திற்காக நிதியை பயன்படுத்தியதாக நிறுவனம் குற்றம்சட்டியிருந்தது.
- 2013ஆம் ஆண்டு ஐ.ஓ.பி. வங்கியிடம் 30 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில் வழக்குப்பதிவு.
- சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்துள்ளது.
2013ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் இருந்து 30 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவிட்டிருந்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்துள்ளது.
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களையும் திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.
- சில யூடியூபர்கள் மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
- தடை செய்யப்பட்ட சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் தென்னிந்திய நடிகர், நடிகைகள் 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர்கள் ராணா, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ், நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லெட்சுமி, ப்ரணிதா, அனன்யா நாகல்லா உள்ளிட்ட 29 பேர் மீது ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில யூடியூபர்கள் மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சூதாட்ட செயலியால் பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தடை செய்யப்பட்ட சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
- ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்புள்ளதற்கான ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
- வீட்டைசீல் வைக்க எங்கிருந்து அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வந்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சென்னை:
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, மே 16-ம் தேதி திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதன்பின், விக்ரம் ரவீந்திரனின் வீடு, அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், மனுதாரர்கள் இருவரிடமும் எதன் அடிப்படையில் விசாரணை நடத்த முடிவுசெய்யப்பட்டது என்ற விபரங்களை சீலிட்ட உறையில் தாக்கல் செய்தார்.
அதை ஆய்வுசெய்த நீதிபதிகள், 'எங்கள் முன் தாக்கல் செய்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை என தெரிவித்து, முறைகேடில் இருவருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவேண்டும் என தெரிவித்தனர்.
வீட்டைசீல் வைக்க எங்கிருந்து அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வந்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை நீதிபதிகள் பார்த்தனர்.
அதன்பின், டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதற்கு ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. வாதத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக்கூறிய நீதிபதிகள் வழக்கின் விசாரணையை மதிய உண்வுக்கு மேல் ஒத்திவைத்தனர்.
- காங்கிரஸ் தலைவருமான டி.கே.சுரேஷிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
- டிகே சுரேஷ், கர்நாடக துணை முதல் மந்திரியான டி.கே.சிவகுமாரின் சகோதரர் ஆவார்.
புதுடெல்லி:
பணமோசடி தொடர்புடைய விசாரணைக்காக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் தம்பியும், காங்கிரஸ் தலைவருமான டி.கே.சுரேஷிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
ஐஸ்வர்யா கவுடா என்ற பெண் முன்னாள் காங்கிரஸ் எம்.பி டி.கே.சுரேஷின் சகோதரி என பொய்யாகக் கூறிக்கொண்டு பலரை ஏமாற்றியதாக அவர்மீது குற்றச்சாட்டு உள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை ஐஸ்வர்யா கவுடாவை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தது. மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னியும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா மீதான பணமோசடி விசாரணை தொடர்புடையதாகக் கூறப்படும் மோசடி வழக்கு விசாரணைக்காக டி.கே. சுரேஷிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதில், பணமோசடி வழக்கு விசாரணைக்காக ஜூன் 19-ம் தேதி ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளது.
- நாகராஜன், துரை தயாநிதி உள்பட பலர் மீது மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை 2018-ல் தாக்கல் செய்தனர்.
- துரை தயாநிதியின் சிகிச்சை குறித்தான முழுமையான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதி கூறினார்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பரபரப்பு புகார் எழுந்தது.
இதில் தொடர்புடைய ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான எஸ்.நாகராஜன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் 2012-ல் கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நாகராஜன், துரை தயாநிதி உள்பட பலர் மீது மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை 2018-ல் தாக்கல் செய்தனர். இந்த முறைகேடு தொடர்பாக சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது அமலாக்கப் பிரிவு தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.
பின்னர் துரை தயாநிதிக்கு சொந்தமான மதுரை, சென்னையில் உள்ள 25 நிலங்கள், கட்டிடங்கள், வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளைத் தற்காலிகமாக முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று மதுரை மாவட்ட சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த வழக்கில் இருந்து மன ரீதியான உடல்நல பிரச்சனை காரணமாக தன்னை விடுவிக்க கோரி துரை தயாநிதி தரப்பில் சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துரை தயாநிதியை நேரில் ஆஜர்படுத்தி அவரது மனநிலை குறித்து உறுதி செய்ய வேண்டுமென நீதிபதியிடம் முறையிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, துரை தயாநிதியின் சிகிச்சை குறித்தான முழுமையான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறி வழக்கு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012-ம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- வழக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
சென்னை:
தமிழ்நாட்டில், 2006-2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தார்.
அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதாகவும், அதன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012-ம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி, செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறி, முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இந்தச் சூழ்நிலையில், சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் கள்ளக்குறிச்சி தி.மு.க. எம்.பி. கவுதம சிகாமணி, கே.எஸ்.ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே.சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ். பிசினஸ் ஹவுஸ் நிறுவனம் ஆகிய 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் ஆகஸ்டு மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, கவுதம சிகாமணி தவிர மற்றவர்கள் அஜராகி இருந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ராஜ மகேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை, தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஆவணங்களில் ஒரு சில பக்கங்களில் உள்ள விவரங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும், அதுகுறித்து அமலாக்கத்துறை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வாதிட்டார்.
இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜனவரி 24-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.






