என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கே.என்.நேரு விவகாரம்: பணி நியமனத்தில் முறைகேடு - சென்னை ஐகோர்ட்டில் ED மனுதாக்கல்
- ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
- எந்தத் தவறும் செய்யவில்லை என அந்த துறையின் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2,538 பணியாளர்கள் நியமன ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.
அரசு வேலை பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகாரில், எந்தத் தவறும் செய்யவில்லை என அந்த துறையின் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.






