என் மலர்
இந்தியா

12 லட்சம் Followers வைத்திருக்கும் இன்ஸ்டா பிரபலம் ரூ. 40 கோடி பண மோசடி வழக்கில் கைது
- அழகு சாதனம் பொருட்கள் விற்பனை செய்யும் இணைய தளம் சொந்தமானது எனத் தெரிவித்துள்ளார்.
- சரியான விவரங்கள் அளிக்கப்படவில்லை. மோசடி வழக்கில் உள்ள மற்றொருவருடன் தொடர்புகள் இருந்தது கண்டுபிடிப்பு.
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை, சந்தீபா விர்க் என்ற இன்ஸ்டா பிரபலத்தை கைது செய்துள்ளனர். 12 லட்சம் பின்தொடர்பவர்களை (Followers) வைத்திருக்கும் சந்தீபா விர்க் 40 கோடி ரூபாய் அளவில் பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டின்படி மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் மொகாலியில் உள்ள காவல்நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டள்ளது. சந்தீபா விர்க் மோசடி வழியில் அசையா சொத்துகளை வாங்கியதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை அமலாக்கத்துறை டெல்லி மற்றும் மும்பையில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பணமோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடத்தியது, அப்போது இவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
FDA அங்கீகாரம் பெற்ற அழக சாதன பொருட்களை விற்பனை செய்வதாக கூறும் hyboocare.com இணைய தளம் தனக்கு சொந்தமானது எனக் கூறிக்கொண்டு வந்துள்ளார். எனினும், அதில் தெரிவிக்கப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இணைய தளம் பயனாளர்களுக்கு குறைபாடு உள்ளதாகவும், பணம் செலுத்தும் கேட்-வே அடிக்கடி பிரச்சினையை மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் தொடர்பு எண் செயல்பாட்டில் இல்லை. நிறுவனம் குறித்து வெளிப்படைத்தன்மையான விவரங்கள் இல்லாமல் இருந்துள்ளது. நிதி மோசடி செய்வதற்காக உண்மையில்லாத வணிக செயல்பாட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதுபோக, தற்போது செயல்படாத ரிலையன்ஸ் கேப்பிட்டல் லிமிடெட் நிறுவுனத்தின் முன்னாள் டைரக்டர் அங்காரை நடராஜன் சேதுராமனுடன் தொடர்புகள் இருந்ததாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேதராமனின் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது, தனிப்பட்ட ஆதாயத்திற்கான நிதியை மாற்றியது, சட்டவிரோத வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அங்காரை நடராஜன் சேதுராமன் 40 கோடி ரூபாயை தனிநபர் ஆதாயத்திற்காக நிதியை பயன்படுத்தியதாக நிறுவனம் குற்றம்சட்டியிருந்தது.






