அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் மீது ED பதிவு செய்த வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!

2013ஆம் ஆண்டு ஐ.ஓ.பி. வங்கியிடம் 30 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில் வழக்குப்பதிவு.சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்துள்ளது.
அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் மீது ED பதிவு செய்த வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!
Published on

2013ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் இருந்து 30 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவிட்டிருந்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்துள்ளது.

சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களையும் திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com