என் மலர்tooltip icon

    இந்தியா

    பணமோசடி விவகாரம்: டி.கே.சிவகுமாரின் சகோதரருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
    X

    பணமோசடி விவகாரம்: டி.கே.சிவகுமாரின் சகோதரருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

    • காங்கிரஸ் தலைவருமான டி.கே.சுரேஷிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
    • டிகே சுரேஷ், கர்நாடக துணை முதல் மந்திரியான டி.கே.சிவகுமாரின் சகோதரர் ஆவார்.

    புதுடெல்லி:

    பணமோசடி தொடர்புடைய விசாரணைக்காக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் தம்பியும், காங்கிரஸ் தலைவருமான டி.கே.சுரேஷிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

    ஐஸ்வர்யா கவுடா என்ற பெண் முன்னாள் காங்கிரஸ் எம்.பி டி.கே.சுரேஷின் சகோதரி என பொய்யாகக் கூறிக்கொண்டு பலரை ஏமாற்றியதாக அவர்மீது குற்றச்சாட்டு உள்ளது.

    இதுதொடர்பாக அமலாக்கத்துறை ஐஸ்வர்யா கவுடாவை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தது. மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னியும் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், ஐஸ்வர்யா மீதான பணமோசடி விசாரணை தொடர்புடையதாகக் கூறப்படும் மோசடி வழக்கு விசாரணைக்காக டி.கே. சுரேஷிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதில், பணமோசடி வழக்கு விசாரணைக்காக ஜூன் 19-ம் தேதி ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×