search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blackmail"

    • கடன் வாங்கியவர்கள் பணத்தை செலுத்திய பிறகும் வீட்டு பத்திரங்களை கொடுக்காமல் கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
    • ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரிய மாயாகுளத்தை சேர்ந்தவர் கலீல் ரகுமான். இவர் ராமநாதபுரத்தில் மிளகாய் கமிசன் கடை வைத்திருந்த போது வட்டிக்கு பணம் கொடுக்கும் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    கலீல் ரகுமான் மகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் கங்காதரனிடம் சென்று பணம் கேட்டார். 100 ரூபாய்க்கு 1 ரூபாய் வட்டி வீதம் ரூ.4 லட்சம் பெற்று மாதம் தவறாமல் வட்டி செலுத்தி வந்துள்ளார்.

    உறவினர்களுக்கு பணம் தேவைபட்டால் வாங்கி கொடுங்கள் என்று கூறியதால் கலீல் ரகுமான் உறவினர்கள் மற்றும் ஊரில் உள்ள 19 பேருக்கு மொத்தம் ரூ.46 லட்சம் கடனாக பெற்றுகொடுத்தார். அந்த பணத்திற்கு பதிலாக 19 பேரின் வீட்டு பத்திரங்களை வாங்கி கொடுத்தார்.

    பின்னர் கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால் பணம் வாங்கிய சிலர் வட்டி செலுத்த முடியாமல் போனதால் ரூ.100-க்கு 3 ரூபாய், 100 ரூபாய்க்கு 10 ரூபாய், 100 ரூபாய்க்கு 13 ரூபாய் வட்டி வீதமும் மற்றும் அபராத தொகையும் சேர்த்து ரூ.1 ½ கோடி கட்டினர்.

    பெரும்பாலானோர் அசல் தொகையை செலுத்தி விட்டதால் அசல் தொகை அனைத்தையும் வட்டி தொகையில் வரவு வைத்து தற்போது ரூ.50 லட்சம் தர வேண்டும் என்று கங்காதரன் மிரட்டியுள்ளார். பணம் பெற்றவர்கள் அசல் தொகை செலுத்தியதால் வீட்டு பத்திரத்தை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை.

    ரூ.46 லட்சம் அசல் தொகைக்கு ரூ. 1 ½ கோடி செலுத்தியும் கங்காதரன் பத்திரத்தை கொடுக்காமல் அடியாட்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து மிரட்டி உள்ளார். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையிடம் கலீல் ரகுமான் மனைவி உம்முல் ஹபீபா புகார் செய்தார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.

    உத்தரப்பிரதேசம் அருகே காலிந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் கழிவறையில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. #KalindiExpress
    கான்பூர்:

    உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர்-பிவானி இடையே ஓடும் காலிந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 7.10 மணிக்கு பாரஜ் பூர் ரெயில் நிலையத்துக்கு வந்து நின்றது.

    அப்போது அந்த ரெயிலின் கழிவறையில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் ரெயிலின் மேல் கூரையில் உள்ள பிளைவுட் சேதம் அடைந்தது.

    கழிவறையில் வெடித்ததால் பயணிகள் காயமின்றி தப்பினர். குண்டு வெடித்த சத்தம் கேட்டதும் ரெயில்வே போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து வந்து பார்வையிட்டனர். அது பட்டாசை விட சற்று சக்தி வாய்ந்தது என தெரிவித்தனர். இதனால் பயணிகள் தப்பினர்.

    குண்டு வெடித்ததும் புல்வாமா தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பெயரில் ரெயில் நிலையத்துக்கு மிரட்டல் வந்தது.

    சம்பவ இடத்துக்கு பயங்கரவாத தடுப்பு படை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சிறிது நேர தாமதத்துக்குப் பின் பலத்த பாதுகாப்புடன் ரெயில் புறப்பட்டுச் சென்றது. #KalindiExpress
    திருமங்கலத்தில் மணல் எடுப்பதை கண்டித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் பகுதியில் சிலர் ஆற்றுப்படுகையில் மணல் எடுத்து வந்தனர். இதனை ராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 49) உள்பட 10 பேர் கண்டித்துள்ளனர்.

    இதனால் மணல் எடுத்தவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். கிருஷ்ண மூர்த்தியும் வீட்டிற்குச் சென்று விட்டார்.

    மறுநாள் காலை அவர் வீட்டில் இருந்தபோது அலம்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் அம்சு பாண்டி (31), தனுஷ்கோடி மகன் ராஜேஷ் (31) ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் மணல் எடுப்பதை ஏன் தடுக்கிறாய்? என கேட்டதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக திருமங்கலம் தாலுகா போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அம்சு பாண்டியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    ×