என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மார்த்தாண்டம்-குலசேகரம் இடையே பழுதான சாலையை சீரமைக்க வேண்டும்
  X

  பழுதடைந்த சாலையில் வாகனங்கள் சிரமபட்டு செல்லும் காட்சி

  மார்த்தாண்டம்-குலசேகரம் இடையே பழுதான சாலையை சீரமைக்க வேண்டும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
  • இருசக்கர வாகனத்தில் வரும் வாலிபர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகளும் ஏற்படுகிறது.

  கன்னியாகுமரி:

  குலசேகரம் - மார்த்தாண்டம் சாலை மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமானது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையைதான் பயன்படுத்துகிறார்கள். அந்த பகுதியில் தனியார் பள்ளிகூடங்கள், அரசு நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன.

  புத்தன்கடை அருகே தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் கடந்த சில மாதங்களில் சாலையில் இரண்டு பகுதிகளிலும் மழைநீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமித்து தடுப்பு சுவர் கட்டியிருந்தார்கள். இதனால் தண்ணீர் வெளியே செல்லமுடியாமல் சாலையில் தேங்கியது. இதனால் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்பட்டன.

  மழைகாலங்களில் தண்ணீர் வெளியேறாமல் சாலையில் தேங்கியது.இதை கண்டித்து அரசியல் கட்சியினர் மீன்பிடி, வாழை நடும் போராட்டங்கள் நடத்தினர். உடனே நெடுஞ்சாலைதுறையினர் ஒருவாகனத்தில் கொஞ்சம் மண்கொட்டி தற்காலிகமாக சரிசெய்தனர்.

  சாலையின் ஒரு பகுதி அருவிக்கரை ஊராட்சிக்கும், மறுபகுதி திருவட்டார் பேரூராட்சிக்கும் சொந்த மானது. உடனே அரசு அதிகா ரிகள் வந்து பார்வையிட்டு ஆக்கிரமித்து கட்டப்பட்ட தடுப்பு சுவர்களை இடித்து அகற்றினார்கள். அதன் பிறகு சாலையில் தேங்கிய தண்ணீர் வெளி யேற்றப்பட்டது.

  ஆனால் மழையில் சேதமடைந்த சாலையை சரிசெய்யாமல் நெடுஞ்சா லை துறையினர் இருந்தனர். இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் சிரமப் பட்டன. தற்போது தினமும் மழை பெய்து வருவதால் அந்த பகுதியில் தண்ணீர் வெளியே செல்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

  இரவு நேரங்களில் இந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் வரும் வாலிபர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகளும் ஏற்படுகிறது.நேற்று மாலையில் பெய்த கனமழை யால் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் சாலையில் தேங்கி யது . இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றன. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அந்த பகுதி வழியாக செல்லமுடியாமல் அவதிபட்டார்கள்.

  எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு பெரும் விபத்துக்கள் நடைபெறும் முன் இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  Next Story
  ×