என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இ மெயில் மிரட்டல்"

    • பிரதமரின் கோவை சுற்றுப்பயணத்தில் குண்டுவெடிப்பு நடத்த உள்ளோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
    • கோவையில் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் இன்று இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தநிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பணிக்கு வந்த ஊழியர்கள் இன்று காலை இ-மெயில் தகவல்களை சரிபார்த்தனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிரதமரின் கோவை சுற்றுப்பயணத்தில் குண்டுவெடிப்பு நடத்த உள்ளோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம் மற்றும் விமான நிலையத்தில் மோப்பநாய் கொண்டு சல்லடை போட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. அதன்பிறகே போலீசாரும், ஊழியர்களும் நிம்மதி அடைந்தனர். இருந்தாலும் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • போலீசார் நடத்திய விசாரணையில் கவர்னருக்கு வந்த இ மெயில் கோழிக்கோடு பகுதியில் இருந்து வந்திருப்பதை கண்டுபிடித்தனர்.
    • கோழிக்கோடு பகுதியில் விசாரணை நடத்தி இ மெயில் அனுப்பிய நபரை கண்டுபிடித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள கவர்னர் ஆரிப் முகமது கான். இவரது அலுவலகத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு இ மெயில் வந்தது. அதில் 10 நாட்களுக்குள் கவர்னர் கொல்லப்படுவார் என்று மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

    இதுபற்றி கவர்னர் அலுவலக அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் நாகராஜூ உத்தரவிட்டார்.

    சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் கவர்னருக்கு வந்த இ மெயில் கோழிக்கோடு பகுதியில் இருந்து வந்திருப்பதை கண்டுபிடித்தனர்.

    இதுபற்றி கோழிக்கோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் கோழிக்கோடு பகுதியில் விசாரணை நடத்தி இ மெயில் அனுப்பிய நபரை கண்டுபிடித்தனர். அவரது பெயர் சம்சுதீன். அவரை பிடித்து விசாரணை நடத்திய போலீசார் பின்னர் சம்சுதீனை கைது செய்தனர்.

    ×