search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.30 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி
    X

    பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அருகில் கலெக்டர் அனீஷ்சேகர், வக்கீல் கலாநிதி மற்றும் பலர் உள்ளனர்.

    ரூ.30 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி

    • 10 நாட்களில் ரூ.30 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. இதில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார்.
    • மதுரை கிழக்கு யூனியன் தலைவர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாங்குளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் கிருஷ்ணாபுரம் பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஓடையின் குறுக்கே நீர்வளத்துறை சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிறு பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் மூர்த்தி இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பொதுமக்கள் நலன் சார்ந்த இந்த 2 ஆண்டு சாதனை பயணத்தில் மக்கள் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதி போன்ற திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் கடந்த 25-ந் தேதி மாங்குளம் கிராம பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைக்க வந்தபோது மாங்குளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமம் கிருஷ்ணாபுரம் மக்கள் தங்களது பகுதியில் மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி சாலையை கடக்க சிரமப்படுவதாக தெரிவித்தனர்.

    மேலும் கிருஷ்ணாபுரம் பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஓடையின் குறுக்கே சிறு பாலம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதன்படி அந்த பகுதியில் உடனடியாக சிறு பாலம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தேன்.

    கிருஷ்ணாபுரம் பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஓடையின் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட் டுள்ளன. சிறு பாலம் அமைக்கப்படும் என தெரிவித்த 10 நாட்களில் அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் இந்த பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதை விரைவாகவும், தரமாகவும் மேற்கொண்டு மழைக்காலம் தொடங்கும் முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை கிழக்கு யூனியன் தலைவர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×