என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bridge Construction"
- நொய்யல் ஆற்றின் குறுக்கில் ஈஸ்வரன் கோவில் அருகே புதிய பாலம் கட்டப்படுகிறது.
- இதன் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடத்தி பணி துவங்கியது
திருப்பூர் :
திருப்பூர் நொய்யல் ஆற்றின் குறுக்கில் ஈஸ்வரன் கோவில் அருகே புதிய பாலம் கட்டப்படுகிறது.யூனியன் மில் ரோட்டையும், ஈஸ்வரன் கோவில் ரோட்டையும் இணைக்கும் வகையில் இந்த புதிய பாலம் திட்டமிடப்பட்டு, இதன் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடத்தி பணி துவங்கியது.நொய்யல் ஆற்றினுள் தூண்கள் அமைக்க வேண்டிய நிலையில் இதற்காக ஆற்றில் செல்லும் தண்ணீரை பணி நடக்கும் இடத்தில் தடை செய்து திருப்பி விடப்பட்டது. அதன் பின் பண்டிங் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் கோவை, திருப்பூர் சுற்றுப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.இதனால் நொய்யல் ஆற்றில் மழை நீர் பெருமளவு பெருக்கெடுத்ததில் பாலம் கட்டுமான பணியை மேற்கொள்ள முடியவில்லை.தற்காலிகமாக கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து குறைய துவங்கியுள்ளதால் கட்டுமானப்பணி முழு வீச்சில் துவங்கி உள்ளது.
- பல மாதங்கள் ஆகியும் இதுவரை எவ்வித பணியும் நடைபெறவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
- பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் இரவு நேரங்களில் பொதுமக்கள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி ஊராட்சி சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் பாலம் கட்டுவதற்கு நடு ரோட்டில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் இதுவரை எவ்வித பணியும் நடைபெறவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பாலம் கட்டுவதற்கு ரூ.7.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவரை இந்த பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் இரவு நேரங்களில் பொதுமக்கள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டுமென சென்னமநாயக்கன்பட்டி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 10 நாட்களில் ரூ.30 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. இதில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார்.
- மதுரை கிழக்கு யூனியன் தலைவர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாங்குளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் கிருஷ்ணாபுரம் பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஓடையின் குறுக்கே நீர்வளத்துறை சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிறு பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் மூர்த்தி இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பொதுமக்கள் நலன் சார்ந்த இந்த 2 ஆண்டு சாதனை பயணத்தில் மக்கள் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதி போன்ற திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த 25-ந் தேதி மாங்குளம் கிராம பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைக்க வந்தபோது மாங்குளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமம் கிருஷ்ணாபுரம் மக்கள் தங்களது பகுதியில் மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி சாலையை கடக்க சிரமப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும் கிருஷ்ணாபுரம் பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஓடையின் குறுக்கே சிறு பாலம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதன்படி அந்த பகுதியில் உடனடியாக சிறு பாலம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தேன்.
கிருஷ்ணாபுரம் பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஓடையின் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட் டுள்ளன. சிறு பாலம் அமைக்கப்படும் என தெரிவித்த 10 நாட்களில் அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் இந்த பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதை விரைவாகவும், தரமாகவும் மேற்கொண்டு மழைக்காலம் தொடங்கும் முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை கிழக்கு யூனியன் தலைவர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
- 30 ஆண்டுகளாக மண் சாலையாக இருந்தது
வாணியம்பாடி:
வாணியம்பாடி நகராட்சியின் நகரமன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் உமா சிவாஜி கணேசன் தலைமையில் நகர மன்ற அரங்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு துணைத் தலைவர் கயாஸ் அஹமத், ஆணையாளர் மாரிசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சங்கர் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு திட்ட பணிகள் உட்பட 99 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தில் மன்ற உறுப்பினர் பி.முஹம்மது அனீஸ் பேசுகையில்:- ஆமினாபாத் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக மண் சாலையாக இருந்தது. தற்சமயம் நகராட்சி சார்பில் பேவர் பிளாக் சாலை மற்றும் குடிநீர் பைப்பு அமைத்து தந்த நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார். நகராட்சி பகுதியில் சாலைகள் பழுதாகி உள்ளது. அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உறுப்பினர் ஏ.நாசீர்கான் பேசுகையில், வாணியம்பாடி நகரின் முக்கிய பிரச்சினையான நியூடவுன் ரெயில்வே சுரங்கபாதை பணிகளை தொடங்க நகராட்சி சார்பில் செய்ய வேண்டிய பணிகள் விரைந்து செய்து முடித்து சுரங்கப்பாதை பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதில் அளித்து தலைவர் உமா சிவாஜி கணேசன் பேசுகையில், உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் வி.எஸ்.சாரதி குமார், சித்ரா, மா.பா.சாரதி, பஷீர் அஹமத், பிரகாஷ், ஆஷாபிரியா குபேந்திரன், ஹாஜியார் ஜகீர் அகமது, கலைச்செல்வன் உட்பட பலர்கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி மேலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.
- விழுப்புரம் நகராட்சி பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- தற்போது மழைக்காலமாக உள்ளதால், பணியினை விரைந்து முடிக்க வேண்டும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சியில், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின் சார்பில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும்பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தற்போது மழைக்காலமாக உள்ளதால், பணியினை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், இது நகரின் முக்கிய பகுதியாக உள்ளதால் பொதுமக்களுக்கு சிரமமின்றி பணியை விரைந்து முடித்து, சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்கள் விரைந்து பணியினை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் விழுப்புரம் 4 வழிச்சாலை பகுதியிலிருந்து வரக்கூடிய மழைநீர் ஆங்காங்கே தேங்கி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்குவதை கண்டறிந்து அதை சீர் செய்திடும் வகையில் விழுப்புரம் நெடுஞ்சாலை கட்டுமானம் (ம) பராமரிப்புத்துறையின் மூலம் 2021-2022-ஆம் நிதியாண்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், விழுப்புரம் நகரம் வழியாக செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு மேம்பாடு செய்தல் மற்றும் பாக்ஸ் கல்வெட்டு புதிதாக கட்டுதல் என ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு, தற்பொழுது புதிய பஸ் நிலையம் அருகே, புதிய பாலம் கட்டப்படுகின்றன. அதனை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் 2 பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் கட்டும்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணி முடிவுற்றவுடன், மழைநீர் தேங்காமல் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் சென்று விடுகின்ற வகையில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சிவசேனா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் தன்ராஜ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஷோபனா, உதவி பொறியாளர்கள் வசந்தபிரியா, அய்யனார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்