என் மலர்tooltip icon

    உலகம்

    பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் அனுப்பிய பிறந்தநாள் பரிசு என்ன தெரியுமா?
    X

    பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் அனுப்பிய பிறந்தநாள் பரிசு என்ன தெரியுமா?

    • ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலி பிரதமர் மெலோனி உள்ளிட்ட பல உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    • கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி பிரிட்டனுக்குச் சென்றபோது பரிசளித்தார்.

    பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கடம்ப மரக்கன்றை பரிசளித்துள்ளார்.

    பிரிட்டன் தூதரகம் எக்ஸ் (X) வலைத்தளத்தில் பகிர்ந்த தகவலில். "பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, மகாராஜா கடம்ப மரக்கன்றை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். பிரதமரின் 'Ek Ped Maa Ke Naam' என்ற முன்முயற்சியால் ஈர்க்கப்பட்ட இந்த செயல், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான இருவரின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி பிரிட்டனுக்குச் சென்றபோது, இதே முன்முயற்சியின் கீழ் மன்னர் சார்லஸுக்கு "சோனோமா" மரக்கன்றை பரிசளித்ததையும் தூதரகம் குறிப்பிட்டது.

    "காலநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி ஒத்துழைப்பு என்பது காமன்வெல்த் மற்றும் பிரிட்டன்-இந்தியா கூட்டாண்மையின் முக்கிய தூண்களில் ஒன்றாகும்" என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Ek Ped Maa Ke Naam "ஒரே மரம் தாயின் பெயரால்" என்ற முன்முயற்சியின் நோக்கம், ஒரு மரத்தை ஒருவரின் தாயின் பெயரால், அடையாளபூர்வமாக நடுவது ஆகும்.

    பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு, ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலிய பிரதமர் மெலோனி உள்ளிட்ட பல உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×