search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்கள் உருவாக்கிய தொலைநோக்கியில் நிலவை கண்டு மகிழ்ந்த மக்கள்
    X

    தொலைநோக்கியில் நிலவை கண்டுகளிக்கும் மக்கள்.

    பள்ளி மாணவர்கள் உருவாக்கிய தொலைநோக்கியில் நிலவை கண்டு மகிழ்ந்த மக்கள்

    • நிலா, கோள்களையும் மிக அருகில் கண்டு வியப்புற்று மாணவர்களை பாராட்டினர்.
    • தொலைநோக்கியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

    சீர்காழி:

    சீர்காழி சுபம் வித்யா மந்திர் மாணவர்கள், இஸ்ரோ விஞ்ஞானிகளின் வழி நடத்தலில் ஒரு தொலைநோக்கியை உருவாக்கினார்கள்.

    இதன் மூலம் வானில் 15 கோடி கி.மீ தொலைவில் உள்ள சூரியனையும், 3,82,500 கி.மீ. தொலைவில் உள்ள நிலாவின் மேடு பள்ளங்களையும், கோள்களையும், செயற்கை–கோள்களையும், விண்மீன் களையும் மிக அருகில் காணமுடியும்.

    முற்றிலுமாக மாணவர்களால் உருவாக்கப் பட்ட இந்த தொலை நோக்கியை பொதுமக்கள் பயனடையும் வகையில் சீர்காழி சுபம் லிட்டில்ஸ் ஏஞ்சல் பள்ளியில் காட்சி படுத்தப்பட்டது.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இரவில் தோன்றிய நிலாவி னையும், கோள்களையும், செயற்கைகோள்களையும் மிக அருகில் கண்டு வியப்புற்று, மாணவர்களை பாராட்டினர்.

    மேலும், சீர்காழி சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வானி யியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திட, சுபம் வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் தொலைநோக்கியுடன் சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

    இதேபோல் கொள்ளி டத்தில் உள்ள ஜெயின் சங்க கட்டடத்திலும் தொலை நோக்கி வைத்து பொதுமக்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    Next Story
    ×