என் மலர்
நீங்கள் தேடியது "Venice"
- Orizzonti நடுவர் மன்றத்தின் தலைவரான பிரெஞ்சு இயக்குனர் ஜூலியா டுகோர்னாவ் இந்த விருதை அனுபர்ணாவுக்கு வழங்கினார்.
- இந்தப் படத்தை பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்துள்ளார்.
82வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை இளம் இந்திய இயக்குனர் அனுபர்ணா ராய் வென்று வரலாறு படைத்துள்ளார்.
அவரது 'சாங்ஸ் ஆஃப் ஃபார்காட்டன் ட்ரீஸ்' திரைப்படம் இந்த விருதை வென்றது. வெனிஸ் திரைப்பட விழாவின் Orizzonti பிரிவு போட்டியில் அனுபர்ணா சிறந்த இயக்குனர் விருதை வென்றார்.
Orizzonti நடுவர் மன்றத்தின் தலைவரான பிரெஞ்சு இயக்குனர் ஜூலியா டுகோர்னாவ் இந்த விருதை அனுபர்ணாவுக்கு வழங்கினார்.
'சாங்ஸ் ஆஃப் ஃபார்காட்டன் ட்ரீஸ்' என்பது மும்பையில் புலம்பெயர்ந்த இரண்டு பெண்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது.
வாழ்வாதாரம், தனிமை மற்றும் உறவுகள் ஆகிய கருப்பொருள்களைக் கொண்டு அனுபர்ணா இந்தப் படத்தைத் எடுத்துள்ளார். இந்தப் படத்தை பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்துள்ளார்.
Orizzonti பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே படம் இதுவாகும். மேலும் அவ்விருதை வெல்லும் முதல் இந்திய படமாகவும் இது அமைந்துள்ளது.
- எழில் கொஞ்சும் வெனிஸ் நகரை படகுகளில் அமர்ந்து சவாரி செய்தவாறு ரசிப்பதற்காகவே வெளிநாட்டினர் பலர் இங்கு சுற்றுலா வருவர்.
- 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நகரவாசிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் உள்ள பிரபல சுற்றுலா நகரமாக வெனிஸ் விளங்குகிறது. ஏரிகளால் சூழ்ந்த இந்த நகரம், அதன் இயற்கையான அமைப்புக்கும், கலை கட்டுமானத்திற்கும் பெயர் போனதாக விளங்குகிறது. பல்வேறு கால்வாய்களை உள்ளடக்கிய இந்த நகரில் படகு போக்குவரத்து சேவைவே முக்கிய போக்குவரத்து அம்சமாக உள்ளது.
எழில் கொஞ்சும் வெனிஸ் நகரை படகுகளில் அமர்ந்து சவாரி செய்தவாறு ரசிப்பதற்காகவே வெளிநாட்டினர் பலர் இங்கு சுற்றுலா வருவர். இந்தநிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த நகர நிர்வாகம் கட்டண நடைமுறையை அமல்படுத்தி உள்ளது.
வெனிஸ் நகரை சுற்றிப்பார்க்க ஒருநாள் கட்டணமாக 447 ரூபாய் (5 யூரோ) வசூலிக்கப்பட உள்ளது. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நகரவாசிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சீசன் நாட்களில் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணமும் உள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை சுற்றுலா ஆர்வலர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.






