என் மலர்
புதுச்சேரி

ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பரிசு கோப்பை வழங்கிய காட்சி.
சென்னை வங்கி முதலிடம்
- புதுவை லாஸ்பேட்டை உள்விளையாட்டரங்கில் லீ புதுவை ஹாக்கி அமைப்பு சார்பில் தென்னிந்திய அளவிலான 5 பேர் ஹாக்கி சாம்பியன்கோப்பை போட்டி கடந்த 9-ந் தேதி தொடங்கியது.
- காலிறுதிக்கு 8 அணிகள் தகுதி பெற்றன.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை உள்விளையாட்டரங்கில் லீ புதுவை ஹாக்கி அமைப்பு சார்பில் தென்னிந்திய அளவிலான 5 பேர் ஹாக்கி சாம்பியன்கோப்பை போட்டி கடந்த 9-ந் தேதி தொடங்கியது.
காலிறுதிக்கு 8 அணிகள் தகுதி பெற்றன. இறுதிபோட்டிகளை வேளாண் அமைச்சரும், ஒலிம்பிக் சங்க தலைவருமான தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். சென்னை இந்தியன் வங்கி முதல் பரிசும், சென்னை ஜி.எஸ்.டி. சுங்கத்துறை அணி 2-ம் பரிசும், பெங்களூரு மெக்பாய்ஸ் அணி 3-ம் பரிசும், சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 4-ம் பரிசும் வென்றன.
பரிசளிப்பு விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அசோக்பாபு எம்.எல்.ஏ., தமிழ்நாடு பா.ஜனதா மாநில செயலாளர் சூர்யா ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகோப்பை, பதக்கம், ரொக்கப்பரிசுகளை வழங்கினர்.
முதலிடம் பெற்ற அணிக்கு ரூ.50 ஆயிரம், 2-ம் இடம் பெற்ற அணிக்கு ரூ.30 ஆயிரம், 3-ம் இடம் பெற்ற அணிக்கு ரூ.20 ஆயிரம், 4-ம் இடம் பெற்ற அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை புதுவை ஹாக்கி சங்க சேர்மன் லட்சுமிநாராயணன் தலைமையில் கவுரவ தலைவர் செல்வம், நிர்வாகிகள், சீனியர் வீரர்கள் செய்திருந்தனர்.






